Abstract:
சமஸ்கிருத இலக்கிய விமர்சனக்கலை அதன் ஆரம்பகாலத்திலிருந்து நாடகம், காவ்யம் என்ற இரு பிரிவுகளிலும் வளர்ச்சி கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நாட்டிய சாஸ்திரத்தின் ஆசிரியரான பரதர் ரசத்துடன் தொடர்புடையதாக நாடகத்தின் கூறுகளை நுணுகி ஆராய்ந்தார். வடமொழி யாப்பிலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம் என்பவை கூட வாசிக அபிநயத்துடன் தொடர்புபடுத்தியே கூறப்படுகின்றன. ஆனால் பரதருக்குப் பின் வந்த அலங்கார சாஸ்திர ஆசிரியர்களிற் சிலர் நாடகத்தையும், ரசத்தையும் விடுத்து கவிதையின் இயல்புகளை ஆராய்கின்றனர். முதன் முதலில் கவிதையின் இயல்புகளை ஆராய்ந்தவராக பாமஹர் கூறப்படுகிறார். கவிதையியலில் அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றுடன் தொடர்புடையதாக குணங்களையும், தோஷங்களையும் இவர் ஆராய் கிறார். கவிதையில் அலங்கார சாஸ்திரம் என்று அழைப்பதற்கு வழிகோலியவர் பாமஹரே ரசம், த்வனி போன்ற அம்சங்களையும் இவர் அலங்காரத்துக்குள் அடக்குகிறார்