Abstract:
பொருளாதாரம் ஒன்றில் அமைக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பால் அமைக்கப்படாத பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்ற கறுப்புப் பணமானது எவ்வாறு ஒரு பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்பதை எடுத்து விளக்கி இந்தியாவின் கறுப்புப் பண அளவுகளையும் அவற்றின் போக்குகளையும் எடுத்து விளக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். கோட்பாட்டு ரீதியாக பணத்தின் அளவு அதன் வேண்டப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போதும் அல்லது குறையும்போதும் பொருளாதாரத்தில் பண நிரம்பலால் கிடைக்கப்பெறும் நன்மைகள் இல்லாது போகின்றன. இந்தக் கோட்பாடு அடிப்படையில் கறுப்பு பணமானது பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொருளாதார திட்டமிடல் குழப்பப்படுகின்றது. இந்தியாவில் கறுப்பு பணம் பல்வேறு மூலங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது. உலகிலே கறுப்புப் பணத்தை கொண்டிருக்கின்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு 2016 மோடியின் அரசாங்கத்தாலும் முன்னைய அரசாங்களினாலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகள் வெற்றியடைவதற்கு பல சவால்கள் தடையாக உள்ளன. இந்தியாவில் முழுமையான அரசியல் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலமே கறுப்புப் பணத்தை ஒழித்து அதை பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும்.