Abstract:
இந்த உலகம் மனிதனுடையது மட்டுமன்று மனிதன் உலகில் ஓர் அம்சமே. உலகைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூமியில் வாழ்வியல் ஒரு வலையாகப் பின்னப்பட்டுள்ளது. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், இயற்கையின் ஒவ்வொரு அம்சங்களும் இந்த வலைக்குள் அடங்கும். இந்திய சமயமரபு சமூகத்துடனும், தத்துவத்துடனும், மொழியியலுடனும் இணைந்தது போல சூழலியலுடன் இணைந்துள்ளது. புராதன இந்துக்களின் சமய நூல்களாகிய வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும், மனிதன் இயற்கையை ஓம்புவதன் அவசியம் பற்றிக் குறிப்பிடுகின்றன. சட்ட ரீதியாகவும், வாழ்க்கை நெறிமுறையூடாகவும், போதனை வழியாகவும், சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றிய கருத்துக்கள் இவற்றில் எடுத்துரைக்கப்படுகின்றன.