DSpace Repository

1930 - 1958 காலப்பரப்பில் வட இலங்கையின் கல்வி நிலை - ஈழகேசரி வெளிப்படுத்திய கல்விக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Arunthavaraja, K.
dc.date.accessioned 2022-10-31T04:02:05Z
dc.date.available 2022-10-31T04:02:05Z
dc.date.issued 2016
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8350
dc.description.abstract ஒரு தேசத்தின் வரலாற்றினை சரியாக இனங்காண்பதற்கு உறுதியான, நம்பிக்கையான வரலாற்று மூலங்கள் இன்றியமையாதவை. அதுவும் அவை சமகாலத்தவையாக அல்லது சம்பவம் நடைலற்ற காலத்தவையாக, அவற்றுடன் தொடர்புபட்டவைகளாக அமைகின்றபோது அத்தகைய வரலாற்று மூலங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அமைகின்ற போதுதான் அவை குறிக்கப்பட்ட தேசத்தினுடைய வரலாற்றினை உறுதியாகப் பதிவு செய்து வைத்திருப்பதற்கான சாதகமான வாய்ப்பினை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் இடைக்கால யாழ்ப்பாண மக்களது இருப்பினை, அவர்களது வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்துகின்ற வரலாற்று ஆவணங்களில் ஈழகேசரி என்ற வாராந்தப் பத்திரிகைக்கும் தனியிடமுண்டு. பொதுவாக அக்காலப்பகுதியில் தோன்றிய பத்திரிகைகள் எல்லாமே ஏதோ ஒரு மத , அரசியல் மற்றும் தொழிலாளர்களது பின்னணியினை மையமாகக்கொண்டே தோன்றியிருந்தன. ஆனால் எவ்விதமான மதப் பின்னணியினையோ அல்லது அரசியல், சமூகப் பின்னணியினையோ கொண்டிருக்காமல் தமிழ் பேசும் மக்களது சகலதுறை வளர்ச்சியிலும் அக்கறையினைச் செலுத்துகின்ற ஒரே நோக்குடன் யாழ்ப்பாணத்தினைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையே ஈழகேசரி. இப்பத்திரிகை தான் வெளிவந்த காலப்பகுதியில் (1930 - 1958) காணப்பட்ட அக்காலயாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கை மக்களது கல்வி நிலை தொடர்பான பல தகவல்களைத் தருகின்றது. பாதுவாகவே இலங்கையானது பல இனமக்களையும் உள்ளடக்கிய பாரம்பரிய கல்வி, பண்பாட்டு நிறுவனங்களுடன் அடையாளம் காணப்படுகின்ற பிரதேசமாகக் காணப்படுகின்றது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் காணப்படுகின்ற இப்பிரதேசத்தினது சமுதாய வளர்ச்சியில் இலங்கை அரசர்களுடைய காலந்தொடக்கம் ஆங்கிலேயரது காலத்தினது முடிவுவரை கல்வியின் முன்னேற்றமென்பது உன்னதமான இடத்தினைப் பெற்றிருந்தமையினை ஆதாரங்கள் மூலமாக அறிய முடிகின்றது. அவ்வகையில் இத்தகைய இலங்கை மக்களது இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தேய கல்வி நிலையின் தன்மைகளை எடுத்துரைக்கின்ற வரலாற்று ஆவணமாகக்கூட நாம் இப்பத்திரிகையினைப் பார்க்கலாம். அதுமட்டுமன்றி இலங்கை மக்களது கல்விநிலையினை உயர்த்துவதற்கான ஆலோசனைகளையும் கூட அது அவ்வப்போது தனது பத்திரிகையினது வெளியீடுகளின் ஊடாகத் தெரிவித்தும் வந்தது. இதனது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவை எளிய மொழி நடையில் காணப்பட்டதன் பின்னணியில் இது தரும் தகவல்கள் இலகுவான முறையில் மக்களைச் சென்றடைந்தன. குறிப்பாக சுயமொழிக்கல்வி, இலவசக்கல்வி, சமயக்கல்வி, தொழிற்கல்வி, சர்வகலாசாலையினது உருவாக்கம் என்பவை அக்காலப்பகுதியில் இலங்கை மக்களது கல்வி முன்னேற்றந் தொடர்பாக ஈழகேசரியினது பிரதான குறிக்கோள்களாக அமைந்திருந்தன. இதனைவிட இப்பத்திரிகையானது மாணவர்களது நலன்கள், ஆசிரியர்களது நலன்கள் என்பனவற்றிலும் அக்கறையுடன் செயற்பட்டது. எனவே ஈழகேசரி வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதிக்குரிய இலங்கை மக்களது கல்விக் கட்டமைப்பினை அறிய விரும்புகின்ற எவரும் இப்பத்திரிகையினை விலக்கிவிட்டுச் செல்ல முடியாதென்பதே உண்மை. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title 1930 - 1958 காலப்பரப்பில் வட இலங்கையின் கல்வி நிலை - ஈழகேசரி வெளிப்படுத்திய கல்விக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record