Abstract:
சிறப்பு மிகு கலைகளுள் ஒன்றான இசைக்கலை பற்றிய பல செய்திகள் பழந்தமிழர் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இத்தகைய கலைகளின் வரிசையில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இசை பற்றிய பல செய்திகள் இசையின் பழமையையும் முக்கியத்துவத்தினையும் விளக்குவதாக அமைகின்றன. அவ்வகையில், இவை யாவும் இவ்வாய்வுக் கட்டுரையில் இசையின் ஒழுங்குமுறை. நிலங்களுக்குரிய பண்வகைகள். வண்ணங்களின் வகைகள். யாப்பு வகைகளுக்குரிய ஓசைகள் முதலான பதினான்கு இசைத்தலைப்புகளின் வழியாக விரிவாக நோக்கப்படுகின்றன.