Abstract:
சொர்ணலிங்கத்தின் பலவேறு அரங்க நுட்பங்களில் நடிப்பிற்கான முறைைைமகளை விளங்கிக் கொண்டு ஆராய்வதன் மூலம் ஈழத்தரங்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள். உள்வாங்குதல்களை அரங்க கற்கை நெறிக்கும் பயிற்சிக்கான பிரயோகங்களிற்கும் எவ்வகையில் பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்வதோடு அம்முறைமைகள் நவீன அரங்கக் கோட்பாடுகளோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது என்பதும் பரிசீலிக்கப்படுகிறது. விதேசியப்பண்பாடும் சுதேசியப் பண்பாடும் இணைந்துருவாகும் அரங்கமுைைமயில் பண்பாட்டுக்காலநிலைக்கேற்ற வெளிப்பாடு அமைந்த முறை உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக நடிப்பின் குரல் சார்ந்த உடல் மொழி சார்ந்த முறைமைகள், உணர் திறன்கள் மற்றும் உணர்ச்சி வெளிப்படுகைகள், பாத்திரப்பண்புருவாக்கங்கள், ஒழுங்கும் கடமையும், பார்ப்போருடனான ஆற்றுவோரின் ஊடாட்டம், ஆற்றுகைப்பயிற்சியின் தனித்துவம், கலைஞரின் நீண்டகால திறன் வளர்ச்சிப்பின்புலத்தை குறுங்கால கற்றல் செயற்பாட்டிற்கு உபயோகிப்பதற்கான ஆய்வின் முன்வைப்புக்கள் என்பன இவற்றுள் அடங்கும். இவ்வாய்வு நிகழ்கால சவால்களை கடந்த கால அனுபவங்கள் மூலம் தீர்ப்பதை முன்மாதிரியாகக் கொள்கிறது.