dc.description.abstract |
தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது போன்று கடந்த மூன்று தசாப்தகாலங்களில் இனமுரண்பாடுகளின் போது இலங்கையில் வன்முறை மிகவும் ஆபத்தானதோர் நிலையிலிருந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஏழு வருடங்கள் இன்னும் அதிகமான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்ணுற்ற காலப்பகுதியாகக் காணப்படுகின்றது. இந்தச் சூழலில் இவ் ஆய்வானது நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றி மக்களின் நோக்கு நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றியும், உள்ளூர்ச் சூழலில் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதுஇ அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும், அவர்களின் கருத்துநிலை எவ்வாறுள்ளது என்பது பற்றியும் ஆய்வு செய்வதுடனஇ மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்படும் சூழல் பற்றியும் ஆராய்கின்றது. இவ் ஆய்வானது இரண்டு மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரதேசசெயலர் பிரிவுகளில் நோக்கம் கருதிய மாதிரியெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 30 பங்குபற்றுனர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. பிரதான ஆய்வின் முடிவுகளானது நீதி நிலைநாட்டப்படுதல் என்பது எல்லாக் குழுக்களையும், வெவ்வேறு நிறுவனங்களின் கீழுள்ள தனிநபர்களையும் சமமாகவும், நீதியாகவும் கையாள்வதுடன் தொடர்புபட்டது என்பதுடன் இலாறுப்புக்கூறல் என்பது மனித உரிமைகள் மற்றும் வன்முறை விடயத்தில் மிகவும் முக்கியமானது என்றும் வாதிடுகின்றது. மேலும் இவ்வாய்வானது தர்க்கரீதியான நோக்கில் குற்றம், குற்றமின்மை, பொறுப்புக்கூறல் போன்ற கருத்தாடல்களை மீள்பரிசீலனை செய்வதுடன், இவ் விடயதானம் தொடர்பாக ஏற்கனவே காணப்படுகின்ற புலமைத்துறைக்கு பங்களிப்புச் செய்வதாகவும், மனித உரிமைகள் துறையில் புதிய ஆய்வுகளிற்கான ஆரம்பத்திசைகாட்டலாகவும் அவ் ஆய்வு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. |
en_US |