dc.description.abstract |
இக்கட்டுரையானதுதமிார் பண்பாட்டில் நிலவும் உணவுநடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் வழக்காறுகளையும் பண்பாட்டியல் இனவரைவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்கின்றது. உணவு தனியே உயிர் வாழ்தலுக்கான அடிப்படையாக மட்டும் காணப்படவில்லை. அது மக்களின் பண்பாட்டு இயக்கத்திற்கும் சமூக அசைவியக்கத்திற்குமான மூலமாகவும் காணப்படுகின்றது. உலகளாவிய நிலையில் தமிழர் பண்பாட்டின் தனித்துவமான சமூகப் பிரக்ஞை மற்றும் அடையாளத்தினை கட்டமைத்தல், மீட்டுருவாக்கம் செய்தல் ஆகியவற்றில் உணவுப் பண்பாட்டின் முக்கியத்துவத்தினை இவ்வாய்வு வெளிக்கொண்டு வருகின்றது. பண்பாடு என்பது தகவமைப்பு சார்ந்தது எனும் மானிடவியல் சிந்தனையின் வழியாக தமிழர் பண்பாட்டில் நிலவும் வேறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்துடனும், நம்பிக்கையுடனும், ஐதீகத்துடனும் ஒன்றிணைந்து காணப்படுமாற்றினை இவ்வாய்வு முதல் நிலை, இரண்டாம் நிலைத்தரவுகளின் வழியாக முன்வைக்கின்றது. உணவுப் பழக்கவழக்கம் தொடர்பான இனவரைவியல் நோக்கிலான விவரிப்புக்களும் விளக்கங்களும் தமிழர் பண்பாட்டு மரபில் உணவின் சமூக - பண்பாட்டியல் பரிமாணத்தினை முன்னிறுத்துகின்றது. உலகமயமாக்கல் விசைகளிடையே தமிழர் பண்பாட்டின் சமூக மனத்தின் விளைவுகளாக உணவியல் நடைமுறைகளும் அதன் வழியான அடையாள மாற்றங்களையும் இவ்வாய்வு மானிடவியல் அணுகு முறையின் வழியாக வெளிப்படுத்துகின்றது. மேலும் தமிழர் அடையாளம் தொடர்பான இன்றைய பல்வேறு விவாதங்களிடையே தமிழர் உணவின் பண்பாட்டியல் இயக்கத்தினை பகுப்பாய்வு செய்கின்றது. |
en_US |