Abstract:
பிரதேச மொன்றின் அபிவிருத்தி பற்றிய தேடலானது சமூகப் பண்பாட்டு மாதிரிகளுக்குள் அதிகம் பிரபலிப்பதாக விளங்குகிறது. இலங்கைத் தமிழரின் அரசியல் பொருளாதாரப் பாரம்பரியத்திலும் அவற்றினை பேணுவதிலும் சமூகப் பண்பாட்டுக் குறிகாட்டிகள் தவிர்க்கமுடியாத பிணைப்பைக் கொண்டுள்ளன. சிறப்பாக இயற்கை வளங்கள் மனித வளங்கள் என்பனவற்றின் பங்களிப்பானது அபிவிருத்தியை அடைவதற்கு உரித்தான வாய்ப்புக்களை அதிகமாகவே கொண்டுள்ளது. அவற்றை சரிவரவும் நவீன தொழில் நுட்ப வாதிகளுக்குட்படுத்தியும் தொழிற்துறை காண் நவீனத்துவத்தின் கவனம் செலுத்துதினூ டாகவும் சமூக பண்பாட்டு மாதிரிகளை செழுமைப்படுத்தி வெற்றி கொள்வது அவசியமான ஒன்று. வடக்குப் பிரதேசம் தனித்துவமான பிரதேசமாக புராதன காலம் முதல் அந்நிய அரசுகளின் காலத்திலும் அத்தகைய முக்கியத்துவம் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பேணப்பட்டு வந்துள்ளன. இதிலிருந்து மாறுதலைச் செய்யவும் பொருளாதார செழிப்பினை மீட்டவும் முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் சரியான சிந்தனை முன்னெடுக்கப்படுவதோடு வெற்றி கொள்ள வகையிலான முயற்சியாண்மைகள் சம காலத்தில் அவசியமானது.