Abstract:
2020 ஆம் ஆண்டு உலக வல்லரசாக எழுச்சியடையும் தொலைநோக்குடன் அரசியல், பொருளாதார, இராணுவ உபாயங்களை வகுத்து வரும் நாடு இந்தியா. அத்தகைய தொலைநோக்கென்பது போட்டித்தன்மையூடாக வெல்வது ஒன்றாகவும், உலக வல்லரசுகளோடு இசைந்து அத்தகைய இடத்தை வெல்வது இன்னென்றாகவும் அமைந்துள்ளது. இத்தகைய பாரிய இலக்குடன் போராடும் இந்தியாவுக்கு இலங்கை இனப்பிரச்சினை அதிக சவாலானதாக அமைந்து வருகிறது. இது இந்தியாவின் வல்லரசாக எழுவதற்குத் தடையாக உள்ளதெனப் புரிதல் இன்னோர் அசாத்தியமான பார்வையாகும். மறுபக்கத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டு அதிகமான நெருக்கடியை இந்திய அரரியலில் எதிர்கொண்டது. போரும் சமாதானமும் நிகழ்ந்த 2002 - 2009 காலப்பகுதிக்கான அாரியல் உள்நாட்டிலும் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலும் முனைப்பான அரசியல் இராணுவதளம்பலுக்கு இட்டுச்சென்றது. சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும் இலங்கை - இந்திய உறவு முறுகலும் மோதலும் முரண்பாடும் எனத் தளம்பலாகவே காணப்பட்டது.