dc.description.abstract |
இலங்கையின் வடக்குமாகாணப் பாடசாலைமாணவர்கள், க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில்
தொடர்ச்சியாக பலவீனமான செயல்திறனையே வெளிப்படுத்துகின்றனர். இது நீண்டநாளைய நோக்கில்
பெரும்பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது. பரீட்சைப் பெறுபேறுகளில் வீழ்ச்சிநிலை ஏற்படுவதற்கான
காரணங்களை கண்டறிந்து, அவர்களின் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான இந்த பிரச்சினைப்
பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது. பண்பறிரீதியான இவ்வாய்வில். தரவுகள், ஆசிரியர்கள், அதிபர்கள்,
கல்விஅதிகாரிகள், ஆசிரியகல்வியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும்
சமூகத்திலுள்ள பல்துறைசார் அறிஞர்கள் என 65 முக்கியமான தரவுதருனர்களிடமிருந்து நேர்காணல் மூலம்
பெற்றுக்கொள்ளப்பட்டது. தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மாணவர்களின்
க.பொ.த சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்று வீழ்ச்சியில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பான காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை
இடத்திற்கிடம் சூழலுக்குஏற்ப வேறுபடுகின்றன. வடக்கு மாகாணத்தில் கல்விவலயங்களிடையிலும்
பாடசாலைகளுக்டையிலும் ஆசிரியர்வளம் முறையாகப் பகிரப்படவில்லை. ஆசிரியர் நியமனங்களிலும்
குறைபாடு காணப்படுகின்றது. இலங்கையில், அதிகளவிலான தொண்டராசிரியர்
வடக்குமாகாணத்திலேயே கடமையாற்றுகின்றனர். மேலும் கணிசமான கல்வி அதிகாரிகளும், பாடசாலை
அதிபர்களும் நிர்வாகத்திறன் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். மாணவர்களிடம் சுயகற்றல் மற்றும்
வாசிப்புபழக்கம் என்பன குறைவடைந்து செல்கின்றது. போதைப்பொருள்பாவனை, மதுப்பழக்கம், மற்றும்
அதிகரித்த கைத்தொலைப்பேசிப்பாவனை மற்றும் சமூகஊடகப் பாவனை என்பனவற்றால் மாணவர்களின்
கற்றல் பாதிக்கப்படுகின்றது. பெற்றோர், தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்
நாடகங்களுக்கு அடிமையாதல் மற்றும் பிள்ளைகளின் கல்வி தொடர்பான ஈடுபாடு குறைவு என்பன
பிள்ளைகளின் அடைவு வீழ்ச்சிக்கு காரணமாகின்றது. இலங்கையின் 25 மாவட்டங்களினதும் வறுமை
சுட்டெண்ணையும் க.பொ.த சாதாரணதரப்பரீட்சை சித்திவீதத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது, வடக்கு
மற்றும் கிழக்கு மாணங்களிலுள்ள மாவட்டங்களிலும் நுவரேலியா மாவட்டத்திலும் நேரடித் தொடர்பு
காணப்படுகின்றது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் மாணவர்களின் வினையாற்றலை
மேம்படுத்துவதற்கான பல்வேறு உத்திகளையும் இந்த ஆய்வு முன்வைத்துள்ளது. |
en_US |