dc.contributor.author | Nithlavarnan, A. | |
dc.date.accessioned | 2021-12-01T08:01:56Z | |
dc.date.accessioned | 2022-07-11T10:23:04Z | |
dc.date.available | 2021-12-01T08:01:56Z | |
dc.date.available | 2022-07-11T10:23:04Z | |
dc.date.issued | 2015 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4347 | |
dc.description.abstract | இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட இலங்கைத்தமிழர்கள்இ இந்தியத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவ்வினங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாச்சாரப் பாதுகாப்பிற்கும்இ தமிழ்மொழி அழியாது பாதுகாக்கப்பட வேண்டும். இருந்தபோதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்தேய ஆதிக்கம் என்பவற்றினாலும்இ இலங்கையில் வரலாற்றுரீதியாக சிறுபான்மையினர் மொழிரீதியான பாகுபாடுகளிற்குட்பட்டுவருவதனாலும்இ தமிழ்மொழி அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மேலும் இனமுரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமானளவு தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தமிழ்மொழியை எழுத வாசிக்க இடர்படுகின்றனர். அவர்களுக்கான தமிழ் கற்பிக்கும் வழிமுறைகளைக்கண்டறியும் பொறுப்பும் அவர்களின்தாயகம் என்ற வகையில் இலங்கைக்குண்டு. இப்பின்னணியில் இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை மீள்பார்வைக்குட்படுத்திஇ மேம்படுத்தவேண்டிய தேவை அவசியமாகவுள்ளது. இவ்வாய்வானது தற்காலத்தில்இ இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தல் நடைமுறைகள்இ தமிழ்பாடம் கற்பதில் மாணவர்களுக்குள்ள ஆர்வம்இ பொதுப்பரீட்சைகளில் மாணவர்களின் தமிழ்பாடஅடைவுகள்இ கற்றல் - கற்பித்தலில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை தொடர்பாக ஆராய்கின்றது. அளவறி மற்றும் பண்பறிரீதியான ஆய்வுமுறையியல்கள் இரண்டும் கலந்து இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகளஇ; புள்ளிவிபரங்கள்இ கலைத்திட்ட ஆவணங்களின் பகுப்பாய்வு மற்றும் இலக்கியமீளாய்வுகளில் இருந்து பெறப்பட்டது. முதனிலைத்தரவுகள்இ தமிழ்பாட ஆசிரியர்கள்இ மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடல்இ வகுப்பறைத்தரிசிப்பு என்பவற்றின் மூலம் பெறப்பட்டது. இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தல் புராதன காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. ஆதிகாலத்தில் குருகுல முறைமூலம் தமிழ் கற்றல் - கற்பித்தல் இடம்பெற்றது. தற்காலத்தில் முறைசார்கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள்இ பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இவற்றுக்கு புறம்பாக சமூகநிறுவனங்களினாலும் இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தரம்-1 தொடக்கம் தரம்-11 வரையிலான வகுப்புகளுக்கு தமிழ் கட்டாய பாடமாகவுள்ளது. கல்விப்பொதுத்தராதர சாதாரணதர வகுப்பில்இ ரூசூ39;தமிழ் இலக்கிய நயம்ரூசூ39; என்ற பாடமும்இ ரூசூ39;இரண்டாம் மொழி - தமிழ்ரூசூ39; என்ற பாடமும் தெரிவுப்பாடங்களாக உள்ளன. கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கலைப்பிரிவில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில்இ கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் சராசரியாக 20மூ ஆனோர் சித்தியெய்தத்தவறுகின்றனர். அதேபோன்று தெரிவுப்பாடமாகிய ரூசூ39;தமிழ் இலக்கிய நயம்ரூசூ39; பாடத்தில் 33மூ ஆனோர் சித்தியடைவதில்லை. இதுதவிர உயர்தரப்பரீட்சையில் 16மூ ஆனோர் தமிழ் பாடத்தில் சித்தியெய்தத்தவறுகின்றனர். இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்தை சிறப்புப்பாடமாக தெரிவுசெய்து கற்கும் மாணவர் எண்ணிக்கை தற்காலத்தில் குறைவடைந்து செல்கின்றது. இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தலில்; கல்விக்கொள்கைகள்இ கலைத்திட்டம்இ மதிப்பீடுஇ கற்பித்தல் முறையியல்இ மற்றும் ஆசிரியர் பயிற்சி சார்பான சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் | en_US |
dc.subject | இலங்கை | en_US |
dc.subject | தமிழ்மொழி | en_US |
dc.subject | கற்றல்-கற்பித்தல் | en_US |
dc.subject | சவால்கள் | en_US |
dc.title | இலங்கையில் தமிழ் கற்றல்-கற்பித்தல்; தற்கால நடைமுறைகளும் சவால்களும் | en_US |
dc.type | Article | en_US |