dc.description.abstract |
இலங்கைப் பொருளாதாரத்தில் கால்நடை
உற்பத்தியானது பிரதான பங்கினை வகிக்கின்றது. கால்நடை வளர்ப்பானது
வேலைவாய்ப்புக்களை வழங்குவதுடன் வருமானத்தை அதிகரித்து
வறுமையைக் குறைக்கின்ற ஒரு துறையாகவும் காணப்படுகின்றது.
கால்நடை வளர்ப்பில் அதிகளவிலான வருமானத்தை பெற்றுத்தருவதில்
பாலுற்பத்தி தொழிலானது முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தற்போது
உலகளாவிய ரீதியில் மந்தபோசாக்கு காரணமாக மக்கள் அதிகளவிலான
தொற்றுநேய்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு காரணமான போசாக்கு
குறைபாட்டை குறைப்பதற்கான ஊட்டச்சத்துகள் நிறைந்த நிறையுணவாக
பாலுற்பத்தி உணவுகள் காணப்படுகின்றன.
இவ்வாய்வானது பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் பால்
உற்பத்தியாளர்களின் வருமானத்தினை தீர்மானிக்கும் காரணிகளைக்
கண்டறிதலை நோக்கமாகக் கொண்டு முதலாம் நிலை, இரண்டாம் நிலை
தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. முதலாம்
நிலை தரவுகள் பாலுற்பத்தி மூலம் வருமானம் பெற்றுக்கொள்ளும் 100
உற்பத்தியாளர்களை எழுமாறாக தெரிவு செய்து வினாக்கொத்துகள் மூலம்
தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மாறிகளாக எடுத்துக்கொள்ளப்பட்ட வருமானத்தினை
தீர்மானிக்கின்ற உற்பத்தியின் அளவு, சந்தைப்படுத்தல் வசதி, பாலின
தரம், கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளின் இனம்
ஆகிய காரணிகள் பாலுற்பத்தியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற
வருமானத்தில் நேர்க்கணிய தாக்கத்தினை ஏற்படுத்துவனவாகக்
காணப்படுகின்றன. இவற்றில் பாலுற்பத்தியின் அளவானது அதிகளவிலான
தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை இப்பிரதேசத்தில் உள்ள10ர்
இனப்பசுக்களே அதிகமாக காணப்படுகின்றன. இவற்றின் மூலமாக
குறைந்தளவிலான உற்பத்தியினையே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால்
பாலுற்பத்தியாளர்களிடையே குறைந்தளவான வருமானம் பெறுபவர்களே
அதிகளவில் உள்ளனர் என முடிவு கண்டறியப்பட்டுள்ளது. |
en_US |