dc.description.abstract |
மனிதன் தனது எண்ணங்கள், சிந்தனைகள்,
விருப்பு, வெறுப்புக்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தும்
ஊடகமே மொழி ஆகும். உலகில் பயன்பாட்டிலுள்ள மொழிகள் அவற்றின்
இயல்பு, தன்மை ஆகியவற்றிற்கேற்ப பல்வேறுபட்ட மொழிக்குடும்பங்களாக
வகைப்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் தமிழ், சிங்கள மொழிகள்
முறையே திரவிட, இந்தோ - ஆரிய மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த
மொழிகளாக விளங்குகின்றன. தமிழ், சிங்கள மொழிகள் தமக்கெனத்
தனித்துவமான இலக்கண அமைப்புக்களைக் கொண்டுள்ளன.
அவ்வகையில் வேறுபட்ட மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்,
சிங்கள மொழிகளிலுள்ள வேற்றுமை உருபுகளுக்கிடையே நிலவுகின்ற
தொடர்புகளை விளக்கும் வகையில் இவ்வாய்வு அமைந்துள்ளது.
இவ்விருமொழிகளிலுமுள்ள வேற்றுமை உருபுகளுக்கிடையே
நிலவுகின்ற தொடர்புகள் தமிழ்கிளைமொழிகளில் யாழ்பாணத்தமிழையும்
சிங்களக்கிளைமொழியில் மேற்குக்கிளைமொழிகளில் ஒன்றாக
கொழும்புச் சிங்களக்கிளைமொழியையும் அடிப்படையாக கொண்டு
விளக்கப்பட்டுள்ளன. |
en_US |