DSpace Repository

நடிப்பில் உணர்ச்சிகளை கையாளுதல்: நடிகரின் உளப்பாதுகாப்பு தொடர்பான ஆய்வு

Show simple item record

dc.contributor.author ரதிதரன், க.
dc.date.accessioned 2021-11-05T04:01:13Z
dc.date.accessioned 2022-07-07T07:25:32Z
dc.date.available 2021-11-05T04:01:13Z
dc.date.available 2022-07-07T07:25:32Z
dc.date.issued 2018
dc.identifier.isbn 978-955-0585-11-3
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4156
dc.description.abstract இந்த ஆய்வானது இலங்கைத் தமிழ் அரங்கின் பின்னணியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய, நடிப்புச் சாhந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் தொடர்பாக ஏற்படுகிற நடைமுறைச்சிக்கல்களை இனங்காண்பது மற்றும் எவ்வாறு தீர்ப்பது என்பவைகள் பற்றி ஆராய்கிறது. ஸ்ரெனிஸ்லவஸ்கியால் (ளுவயnளைடயஎயளமi) உருவாக்கப்பட்ட 'முறைமை நடிப்பு' (ஆநவாழன யஉவiபெ) நுட்பங்களில் ஒன்றாகக்கொள்ளப்படும் 'உணர்ச்சி ஞாபகம்' (நுஅழவழைn அநஅழசல ஃ நுககநஉவiஎந அநஅழசல) எனும் நடிப்பு நுட்பத்தை பிரயோகிக்கும் போதும், இந்த நுட்பப்பிரயோகமற்று சாதாரணமாக நடிக்கின்ற போதும் சிலருக்கு ஏற்படும் (குறிப்பாக பயில்நிலையில் இருப்போருக்கு) மட்டுமீறிய உணர்ச்சி வெளிப்பாட்டையே இவ்வாய்வின் பிரச்சனையாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. இது காலம் காலமாக இருந்து வந்திருப்பினும் யுத்தம் மற்றும் யுத்த விளைவுகளால் அதன் வெளிப்படும் விகிதாசாரம் அதிகரித்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. ஆய்வின் கேள்விகளாக- மட்டுமீறிய உணர்ச்சி வெளிப்பாடு நடிகரிடம் தோன்ற என்ன காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன? அது எவ்வகையான பாதிப்புகளை நடிகனுக்கு ஏற்படுத்துகின்றன? – என்பவைகள் அமைகின்றன. ஆய்வின் முறையியலானது பண்புசார் ஆய்வாக இருக்கும் அதேவேளை, அனுகுமுறையானது எடுத்துரைப்பு மற்றும் ஆற்றுகைசார் புலனூசாவலாக (யேசசயவiஎந யனெ Pநசகழசஅயவiஎந iஙெரசைல) ஆக அமைகிறது. இங்கு பெரும்பாலான தகவல்கள் (னுயவய) அனுபவம்சார் தரவுகளாக (நுஅpசைiஉயட நஎனைநnஉந) இருக்கின்றன. அத்தோடு ஆய்வாளரின் சொந்த அனுபவங்களை 'சுய பகுப்பாய்விற்கு'(ஐவெசழளிநஉவழைn) உட்படுத்தப்பட்டு, பின்னோக்கிப் பார்த்து, தகவல்களை மதிப்பிடும் (சுநவசழளிநஉவiஎந) முறையையும் உள்வாங்கி, நெடுக்கு வெட்டு முகமான கால அளவு பார்வையில் (டுழபெவைரனiயெட எநைற) தகவல்களை பரிசீலிக்கும் போது அத்தகவல்கள் சமகால நிலமையின் குறுக்கு வெட்டுமுகமாக (ளுலnஉhசழniஉ யனெ iவெநசளநஉவiபெ) சமகால முக்கியத்துவம்வாய்ந்த நாடகக்காரர்களின் அனுபவங்களோடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவியரீதியில் இவ்வுணர்ச்சி மேலீடு பற்றி துறைசார்ந்தோர் கவனத்தில் கொண்டுள்ளனர். அதில் மேயர்கோல்ட், பேடர்ரோல்ட் பிரெக்ட், மைக்கல் செக்கோவ், ஒகஸ்தா போல் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகின்றனர். இவர்களது அணுகுமுறையில் உணர்ச்சியை முதன்மைப்படுத்தாத உடல் வெளிப்பாடாக்கல், கற்பனைக்கு முக்கியத்துவமளித்தல், அறிவு பூர்வமாக நிகழ்த்தல் மற்றும் அறிவாhந்த உணர்ச்சி (சுயவழையெடணைநன நஅழவழைn) போன்றவற்றை மாற்றீடாகக் கையாண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய அரங்கப் பயில்வை ஆய்வு எல்லையாகக் கொண்ட உசாவலில் நடிகரிடையே அவதானிக்கப்பட்ட, அனுபவித்த, உணர்ந்த, மட்டுமீறிய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அதன் பின்புலங்களை அறிவது நடிகரின் உளப்பாதுகாப்பு, உளநலன் என்பவற்றோடு சம்பந்தப்படுகிறது. எனவே இப்பிரச்சனைக்கான பரிகாரங்கள் நடைமுறையில் எவ்வாறு கையாளப்பட்டன என்பது இவ்வாய்வில் உள்ளடக்கப்படுவதோடு, நடிப்பு மேம்பாட்டை இலக்காகக்கொண்ட இவ்வாய்வானது அரங்கபயிற்சியாளர்கள், நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், நடிகர்கள் மற்றும் அரங்கத்துறைசாhந்தோர், உளவளத்துணையாளர்கள் என்போருக்கு மாற்றுவழிமுறையை வழங்கி பயன்பெறவைக்கிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject உணர்ச்சி en_US
dc.subject மனத்தாக்கம் en_US
dc.subject உளப்பாதுகாப்பு en_US
dc.subject நடிகர் en_US
dc.subject பாத்திரம் en_US
dc.title நடிப்பில் உணர்ச்சிகளை கையாளுதல்: நடிகரின் உளப்பாதுகாப்பு தொடர்பான ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record