DSpace Repository

துணுக்காய்பகுதி நிலப்பயன்பாட்டு மாற்றமும் மனித – வனவிலங்கு முரண்பாட்டில் அதனது தாக்கமும்

Show simple item record

dc.contributor.author பாரதி, பொ.
dc.date.accessioned 2021-11-05T03:54:06Z
dc.date.accessioned 2022-07-07T07:25:36Z
dc.date.available 2021-11-05T03:54:06Z
dc.date.available 2022-07-07T07:25:36Z
dc.date.issued 2018
dc.identifier.isbn 978-955-0585-11-3
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4153
dc.description.abstract பிராந்திய மற்றும் பூகோள மட்டங்களில் இடம்பெறும் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைவளங்களுக்கும் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது. அந்தவகையில் சர்வதேச மட்டத்தில் செயற்திறன் மிக்க ஆய்வினை மேற்கொள்ள நிலப்பயன்பாடு சார்ந்த கற்கைகள் இன்றியமையாததாக உள்ளது. நிலப்பயன்பாட்டு மாற்ற அளவுசார் பண்புசார் பகுப்பாய்வுகளுக்கூடாக நிலப்பயன்பாட்டு மாற்ற தூண்டற்காரணிகள், சூழ்நிலைகள், நிலப்பயன்பாட்டு விதிகள் சார்ந்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் இத் தகவல்களுக்கூடாக திட்டமிடல் நடவடிக்கைகள், வளமுகாமைத்துவ செயற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்து நிற்கக்கூடிய நிலப்பயன்பாட்டு செயன்முறைகள், இயற்கைப் போர்வைகளது நிலைத்திருப்பு என்பவற்றைப் பேணமுடியும். நிலப்பயன்பாட்டு மாற்றமானது மனித - வனவிலங்கு முரண்பாடுகளால் உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல் போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு முதன்மைதூ ண்டற் காரணியாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக மனித சனத்தொகை அதிகரிப்பின் விளைவாக தேவைகள் அதிகரிக்கும் போதும் நகராக்க மற்றும் கைத்தொழில்மயமாக்கல் செயற்பாட்டின் போதும் நிலப்பயன்பாட்டு மாற்றம் துரிதமாக அதிகரிக்கின்றது. இத்தகைய மாற்றம் இயற்கைச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் மனிதனுக்கும், இயற்கைக்கும், இயற்கைச் சூழலைச் சார்ந்து வாழ்கின்ற விலங்குகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை அதிகரிக்கின்றது. அந்தவகையில் இவ் ஆய்வானது இலங்கையின் வடமாகாணத்தின் வனப்போர்வை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பகுதியில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான முரண்பாட்டினைத் தூண்டுவதில் அப்பகுதியில் ஏற்பட்டுவந்த நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் எவ்வளவு தூரம் பங்களிப்புச் செய்கின்றன என்பதனை மதிப்பிடுதல், முரண்பாடுகளால் ஏற்படும் தாக்கங்களை அறிந்துகொள்ளுதல் மற்றும் சூழலியலாளர்கள் திட்டமிடலாளர்களுக்கு உயிர்ப்பல்வகைமைச் சூழல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு களஅவதானம், நேர்காணல் ஆகிய முதனிலைத் தரவுகளும் செய்மதிவிம்பம், இடவிளக்கப்படம் ஆகிய இரண்டாம்நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புவியியல் தகவல் முறைமைத் தொழில்நுட்பம், புள்ளிவிபர நுட்பங்கள் என்பன பயன்படுத்தப்பட்டு இத் தரவுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆய்வுப்பகுதிக்குரிய 1984 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான நிலப்பயன்பாட்டு படங்கள் உருவாக்கப்பட்டு அப்பகுதியில் கால ரீதியாகவும் இட ரீதியாகவும் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் துல்லியமான புள்ளிவிபரங்களாகப் பெறப்பட்டன. இவற்றினை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் மனித வனவிலங்கு முரண்பாட்டில் நிலப்பயன்பாட்டு மாற்றங்களது ஆதிக்கத்தினை அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆய்வின் முடிவில் வனவிலங்குகளது வாழ்விடமாகத் திகழும் வனாந்தரப்போர்வைகள் காலத்துக்கு காலம் துண்டாடப்பட்டு வருதல், மனித நடவடிக்கைகள் வனாந்தரப் பகுதியை நோக்கி அதிகரித்து செல்லுதல், வனாந்தரப் பகுதியை ஊடறுத்து சிறுவீதிகள் அமைக்கப்படுதல், இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருத்தல் போன்றன காரணமாகவே வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்துள்ளது. இம் முரண்பாட்டின் விளைவாக அப் பகுதியில் இடம்பெறுகின்ற பயிர்செய்கை நடவடிக்கைகள் வனவிலங்குகளால் அழிக்கப்படுகின்றன. இவ் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற தடுப்பு நடவடிக்கைகளும் வெற்றியளிக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் மக்களினால் பல்தரப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் யானை தடுப்புவேலி அமைத்தல், வன எல்லைகளை உருவாக்குதல், சட்டத்திற்கு முரணான வகையில் வனாந்தரப் போர்வைகள் துண்டாடப்படுவதைத் தடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக வன விலங்குகளது நிலைத்திருப்பு, தன்னியக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும், உயிர்ப்பல்வகைமையின் உறைவிடமான வனாந்தரப் பகுதிகளை பாதுகாப்பதற்கும், துறைசார்ந்தோருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இவ் ஆய்வு அமையும் என்பதில் ஐயமில்லை. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject நிலப்பயன்பாட்டு மாற்றம் en_US
dc.subject மனித-வனவிலங்கு முரண்பாடு en_US
dc.subject புவியியல் தகவல் முறைமை en_US
dc.subject அளவைசார் பகுப்பாய்வு en_US
dc.title துணுக்காய்பகுதி நிலப்பயன்பாட்டு மாற்றமும் மனித – வனவிலங்கு முரண்பாட்டில் அதனது தாக்கமும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record