dc.description.abstract |
திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர் ஆவார்.
இவர் வாழ்ந்த காலம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.
திருமூலர் சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில்
ஒருவராகவும் இடம்பெற்றுள்ளார். இவர் இயற்றிய திருமந்திரம் பத்தாம்
திருமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. திருமந்திரத்தை தமிழ்
மூவாயிரம் எனக்குறிப்பிட்டாலும் அதில் நாற்பத்தேழு பாடல்களுடன்
முடிவடைகின்றது. இது ஒன்பது தந்திரங்களாக தொகுக்கப்பட்டு உள்ளது.
திருமந்திரத்தில் சமயம், ஒழுக்கம், அறம், நிலையாமை பற்றிய கருத்துக்கள்
மட்டுமல்லாது தற்கால மருத்துவத்தில் பயன்படும் மருத்துவத்தின்
முன்னோடிகளை காணக்கூடியதாக உள்ளது.
உடற்கூற்றியல் கிரேக்கத்தில் யுயெவழஅ என அழைக்கப்படுகின்றது. தாவரம்,
விலங்கு உள்ளிட்ட உயிரினங்களின் உடலின் அமைப்பு பற்றி அறிவைத்
தருவது உடற்கூற்றியல் என அழைக்கப்படுகின்றது. உடலின் பகுதிகள்
அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ
அல்லது நுணுக்குக்காட்டியில் பார்க்கும் வகையிலோ ஆய்வுக்குட்படுத்துவது
உடற்கூற்றியல் என அழைக்கப்படுகின்றது. உடற்கூற்றியலில் தாவர
உள்ளமைப்பியல் தொடர்பாகவும், விலங்கு உடற்கூற்றியல் தொடர்பாகவும்
ஆராயப்படுகின்றது.
உடற்கூற்றியல் தொடர்பான வளர்ச்சி நிலை கருவிகளின் துணை
உருவாக்கத்தின் பின்னரே தனியொரு ஆய்வுத்துறையாக பரிணாம
வளர்ச்சியடைந்தது. ஆனால் திருமூலரோ காலத்தால் மிகவும் முற்பட்டவர்
இவரால் இயற்றப்பட்ட இலக்கியமான திருமந்திரத்தில் உடற்கூற்றியல்
தொடர்பான அதிகமான சிந்தனைகளை கருவிகளின் எத்துணையுமின்றி
கணித்துக் கூறியுள்ளமை பிரமிக்க வைப்பவையாக உள்ளன.
அந்தவகையில் நாடி பார்த்தல், குருதியின் வகை, குழந்தையின் நிறம்,
குண இயல்புகள், மரபனு, கரு உற்பத்தி, பிறக்கும் குழந்தை ஆணா,
பெண்ணா என்பதை எது தீர்மானிக்கின்றது முதலான பல கருத்துக்களின்
முன்னோடிகளை கூறியுள்ளார் இதனை இந்நூலை வாசிப்பதன் மூலம்
அறியமுடிகின்றது.
திருமந்திரம் சமய நூல் என்றும், நிலையாமை பற்றிக் கூறும் சித்தர்
இலக்கியம் என்றே பெரும்பாலானவர்களால் நோக்கப்படுகின்றது.
ஆனால் இந்நூலில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் தொடர்பான
கருத்துக்களுடன் தற்கால மருத்துவம் பயன்படுத்தும் வைத்திய முறைகளும்
காணப்படுகின்றது. திருமந்திரம் அறிவியல் மூலங்களை தம்முள் பொதித்து
வைத்துள்ளது. திருமந்திரத்தில் உடற்கூற்றியல் தொடர்பான கருத்துக்களை
ஆராய்தலை பிரதான நோக்காகக் கொண்டு ஆராயும் இவ் ஆய்வில்
விபரண ஆய்வு, பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு முதலிய ஆய்வு முறைமைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமந்திரத்தில் உடற்கூற்றியல் எனும் ஆய்வு
நாடிப் பரிசோதனை, மரபனு, கரு உற்பத்தி, நோய்கள் அதற்கான
வைத்தியமுறைகள் எனும் தலைப்பில் இவ்வாய்வு ஆராயப்படுகின்றது.
இவ்வாய்வின் மூலம் திருமந்திரத்தில் உடற்கூற்றியல் தொடர்பான
சிந்தனைகள் இனங்காணப்படுவதோடு இத்துறை சார்ந்து விரிவான
ஆய்வுகளில் ஈடுபடுவோர்க்கு இவ் ஆய்வு முன்னோடியாக அமையும். |
en_US |