Abstract:
கி.பி.1820-1840 ஆம் ஆண்டு காலகட்டத்தில்
இந்தியாவின் தென்மானிலத்திலிருந்து இலங்கை பெருந்தோட்ட
பயிர்செய்கைக்காக ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி
மக்களே இன்றைய மலையகத் தமிழர். இச்சமூகமே இன்று தேசிய ரீதியில்
ஐனெலையn வுயஅடைளஇ Pடயவெயவழைn வுயஅடைளஇ நுளவயவந வுயஅடைளஇ ருpஉழரவெசல
வுயஅடைள ழச ர்டைட உழரவெசல வுயஅடைள என அழைக்கப்படுகின்றனர.;
இவர்கள் இன்று நாட்டின் மொத்த சனத்தொகையில் 5.3மூ ஆக
பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை,
காலி, மாத்தளை, மொனராகலை, குருணாகல், கொழும்பு மற்றும்
வட கிழக்கில் கலவர காலத்தில் குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர.;
இத்தகைய வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம் 200 வருட காலத்தை
கடந்தவிட்ட நிலையிலும் இலங்கையில் தேசிய ரீதியான அபிவிருத்தி
அடைவுமட்ட பொதுச்சேவைகளை பெற்றுக் கொள்வதில் பாரபட்சமாக
நடாத்தப்படுகின்றனர் என்பதை கருதுகோளாகக் கொண்டுள்ளது.
இது ஓர் சமூக விஞ்ஞான ஆய்வாக இருப்பதால் இவ்வாய்விற்காக
குழுக்கலந்துரையாடல்கள், நேர்காணல் என்பன முதலாம் நிலை
தரவுகளாகவும், நூல்கள், இணையத்தளம் என்பன இரண்டாம் நிலை
தரவுகளாகவும் பயன்படுத்தப்பட்டு; மலையக சமூகம் ஒரு தேசிய
இனத்துக்குரிய அடையாளத்தினை பெற்றுக் கொண்டுள்ள போதிலும்
ஏன் இதுவரையில் ஆட்சிப்பீடம் ஏறிய எந்தவொரு அரசாங்கமும் ஒரு
நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை? என்பதை ஆய்வு
பிரச்சினையாக முன்வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை
பலப்படுத்தும் பெருந்தோட்ட சமூகத்தின் வளர்ச்சி நிலையில உள்ள
தடைக்கல்லை நீக்கி இம்மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட
வேண்டும் என்ற முன்மொழிவை இவ் ஆய்வு வழங்குகிறது.