Abstract:
மனிதனின் கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மொழி
விளங்குகின்றது. உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறுபட்ட
மொழிகள் மொழிப்பயன்பாட்டில் உள்ளன. இவ்வகையில் இலங்கையில்
தமிழ், சிங்களம், ஆங்கிலம், போர்த்துக்கீசக் கிரியோல்மொழி,
மலாய்மொழி, வேடுவமொழி முதலியன பயன்பாட்டில் உள்ளன.
அவற்றில் தமிழ், சிங்கள மொழிகள் அரசகரும மொழிகளாகவும்
ஆங்கிலமொழி இணைப்பு மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக ரீதியான
மொழிப்பயன்பாட்டு நிலையை நோக்குகின்றபோது நிர்வாக
ரீதியாக அரசகரும மொழிகளின் பயன்பாட்டிற்கான கொள்கைகள்
சிறந்தவகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் நிர்வாக
மொழிப்பயன்பாட்டில் தமிழ்மொழிப் பயன்பாடு மிகவும் பின்தங்கிய
நிலையிலேயே காணப்படுகின்றது. அவ்வகையில் வடக்கு, கிழக்கு
மாகாணங்களின் நிர்வாக ரீதியான மொழிப்பயன்பாட்டில் தமிழ்மொழி
பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கான காரணங்களை விளக்கி,
நிர்வாக ரீதியாக தமிழ்மொழிப் பயன்பாட்டினை செயற்திறன் மிக்கதாக
மாற்றுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் முகமாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.