Abstract:
முதலீட்டுடன் நேரடித் தொடர்புடையதாக
காணப்படுகின்ற சேமிப்பானது ஒரு நாட்டினது பொருளாதார வளர்ச்சி,
அபிவிருத்தி மற்றும் மூலதன வளங்களின் உருவாக்கத்திற்கும்
இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. எந்தவொரு நாட்டினதும்
உள்நாட்டு சேமிப்பு அந்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன்
உறுதிப்பாடு என்பவற்றுக்கு பங்களிப்புச் செய்கின்றது. அத்தகைய உள்நாட்டு
சேமிப்பின் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செய்கின்ற முக்கிய துறையாக
வீட்டுத்துறையின் சேமிப்பு காணப்படுகின்றது. வீட்டுத்துறையின் சேமிப்பு
நாட்டிற்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்டுக்காணப்படுகின்றது.
ஏனைய வளர்ந்து வரும் நாடுகளில் பங்களிப்புச் செய்வது போன்றே
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஏனைய
சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் வீட்டுத்துறையினரின்
சேமிப்பானது பங்களிப்புச் செய்கின்றது. அந்தவகையில் இலங்கையின்
வீட்டுத்துறையின் சேமிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை
கண்டறிவது ஆராயப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. ஆய்வுப் பிரதேசமான
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீட்டுத்துறையினர்
வௌ;வேறுபட்ட வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரத்தைக் கொண்டு
காணப்படுகின்றனர். எனவே ஆய்வுப் பிரதேசத்தில் வீட்டுத்துறையின்
சேமிப்பில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளை கண்டறிவதை
பிரதான நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்விற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்
தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நிலைத்தரவுகள் ஆய்வுப்
பிரதேசத்திலுள்ள 100 வீட்டுத்துறையினரை வசதி மாதிரி எடுப்பு
நுட்பத்தினை பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட
வினாக்கொத்துக்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளதுடன்அத்தரவுகள்
பல்மாறிப் பிற்செலவு முறையினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் சார் மாறியாக வீட்டுத்துறையின்
சேமிப்பினையும் சாரா மாறிகளாக குடியியல், சமூக பொருளாதார
காரணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.ஆய்வின் முடிவுகளின் படி
வீட்டுத்துறையினரின் சேமிப்பில் செல்வாக்குச் செலுத்தும் சாரா மாறிகளான
குடியியல் காரணிகளுள் வயது நேர்க்கணிய தாக்கத்தினையும், பால் நிலை,
வீட்டு அங்கத்தவர் எண்ணிக்கை, திருமணநிலை என்பன எதிர்க்கணிய
தாக்கத்தினையும் சமூகப் பொருளாதார காரணிகளுள் உயர்கல்வி,
தொழில் நிலை, வருமானம், வட்டி வீதம் என்பன நேர்க்கணியத்
தாக்கத்தினையும் வாழ்க்கைச்செலவு எதிர்க்கணிய தாக்கத்தினை
ஏற்படுத்துகின்றது. வீட்டுத்துறையின் சேமிப்பில் திருமண நிலையான
விதவை, கணவனை பிரிந்து வாழ்பவர், கல்வி நிலையில் ஆரம்பகல்வி,
இடைநிலைக்கல்வி, க.பொ.உயர்தரம் என்பன பொருண்மைத்தன்மை
அற்றதாகவும் காணப்படுகின்றமைஆய்வு முடிவுகளாக பெறப்பட்டுள்ளது.
ஆய்வுப்பிரதேச வீட்டுத்துறையினரின் சேமிப்பில் சமூகப் பொருளாதார
காரணிகளே அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இவ்வாய்வின்
துணிவுக் குணகம் (சு2) 0.8774ஆகும். இதன்படி இவ்வாய்விற்காக
எடுத்துக்கொள்ளப்பட்ட சாராமாறிகள் அனைத்தும் சார்ந்த மாறியான
வீட்டுத்துறையின் சேமிப்பின் விலகலை 88மூவிளக்கி நிற்கின்றன. மேலும்
அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்களினால் வீட்டுத்துறையின் சேமிப்பில்
செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை அடையாளம் காண்பதற்கும்
இலங்கையின் உள்நாட்டு சேமிப்பின் அளவினை அதிகரிப்பதற்கான
கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்கு இவ்வாய்வுஉதவியாக
அமையும்.