dc.description.abstract |
உயர் வசதிகளுடன் கூடிய நகரப் பகுதிகளிலேயே வீட்டு
வாடகைச் சந்தையானது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகர்ப்புறங்களில்
மக்கள் புதிதாக வீடுகளை வாங்குவதிலும் பார்க்க வீடுகளை வாடகைக்கு
எடுத்து தங்கியிருக்கவே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் நகரப்
பகுதிகளில் வாடகை வீடுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதோடு
வீடுகளின் வாடகைப் பெறுமதியும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
மேலும் நகரங்களுக்கிடையே வீடுகளின் வாடகைப் பெறுமதியை
தீர்மானிக்கும் காரணிகளும் வேறுபடுகின்றன. ஆய்வுப் பிரதேசமான
மட்டக்களப்பு மாநகரசபைப் பகுதியும் சனத்தொகை அடர்த்தி கூடிய
ஒரு நகரப் பகுதியாகக் காணப்படுகிறது. இங்கு வீட்டு வாடகையானது
இடத்திற்கிடம் வேறுபட்டுக் காணப்படுவதோடு அண்மைக்காலமாக
பாரியளவால் மாற்றமடைந்து கொண்டும் வருகிறது. எனவே ஆய்வுப்
பிரதேசத்தில் வீடுகளின் வாடகைப் பெறுமதியை தீர்மானிப்பதில்
செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளைக் கண்டறிதலை பிரதான
நோக்கமாகக் கொண்டு ஆய்வானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்விற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகள் ஆய்வுப் பிரதேசத்தில்
நோக்க மாதிரி எடுப்பு முறையினைப் பயன்படுத்தித் தெரிவுசெய்யப்பட்ட
100 வாடகைக் குடியிருப்பாளர்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட
வினாக்கொத்துக்களினூடாகப் பெறப்பட்டுள்ளன. ஹெடோனிக்
பிற்செலவு மாதிரிப் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டு தரவுகள் ஆய்வு
செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சாரா
மாறிகளில் பாதுகாப்பான சூழல், வீட்டின் ஆயுட்காலம், அறைகளின்
எண்ணிக்கை, வாடகைக் குடியிருப்பாளரின் மாத வருமானம் என்பன
1மூ பொருண்மை மட்டத்திலும், பஸ்தரிப்பு நிலையத்திற்குள்ள தூரம்,
தொழில்புரிகின்ற இடத்திற்குள்ள தூரம், வீட்டிலிருந்து பிரதான வீதிக்குள்ள
தூரம், பாடசாலைக்குள்ள தூரம், வீட்டின் மொத்தப் பரப்பளவு என்பன
5மூ பொருண்மை மட்டத்திலும், ஷொப்பிங் நிலையத்திற்குள்ள தூரம்,
நீர் வசதி என்பன 10மூ பொருண்மை மட்டத்திலும் சார்ந்த மாறியான
வீட்டின் வாடகைப் பெறுமதியில் செல்வாக்குச்செலுத்துகின்றமை
ஆய்வினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் பிரகாரம்
இவ்வாய்வின் சு2 பெறுமதி 0.8620 ஆகும். இதன்படி இவ்வாய்விற்காக
கருத்திற்கொள்ளப்பட்ட சாரா மாறிகள் அனைத்தும் சார்ந்த மாறியான
வீட்டின் வாடகைப் பெறுமதியின் விலகலை 86மூ விளக்கிநிற்கின்றன.
மேலும் ஆய்வு முடிவுகளின் படி ஆய்வுப் பிரதேசத்தில் மக்கள் வாடகை
வீடுகளை தெரிவுசெய்கின்ற வேளையில் பல்வேறு காரணிகள் தொடர்பாக
கருத்திற்கொள்வதோடு ஹெடோனிக் பிற்செலவுப் பகுப்பாய்வு முறையானது
ஆய்வுப் பிரதேசத்தில் வீடுகளின் வாடகைப் பெறுமதியில் செல்வாக்குச்
செலுத்துகின்ற காரணிகளைக் கண்டறிவதற்கான சிறந்த ஒரு மதிப்பீட்டு
நுட்பமாகவும் சிபார்சு செய்யப்படுகிறது. இவ்வாய்வு முடிவுகள் சொத்து
மதிப்பீட்டாளர்களுக்கும் ஆய்வுப் பிரதேசத்தில் ஒரு வாடகை ஒழுங்கு
முறையினைப் பின்பற்றுவதற்கும் வழிகாட்டியாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது |
en_US |