Abstract:
இலங்கையின் சுற்றுலாத் துறையானது
நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும்
சாதகமானதாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலையும் வளத்தையும்
கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில் பாரியளவு அந்நியச்
செலாவணியை ஈட்டித்தருவதுடன் அதிகளவில் வேலைவாய்ப்பையும்
உருவாக்குகின்றதுறையாககாணப்படுகின்றது. இவ்வாய்வானது
சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில்
எவ்வாறானதாக்கத்தைக் கொண்டுள்ளது என்பதைகண்டறிவதை
நோக்கமாகக்கொண்டு காணப்படுகின்றது. இந்நோக்கத்தை
அடைவதற்காக 1990 தொடக்கம் 2016 வரையான காலத்
தொடர்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அலகு மூல சோதனை
மூலம்காலத் தொடர்தரவுகளின் மாறாத்தன்மைப் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்மாறிபிற்செலவு அணுகுமுறையினூ
டாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வின் சார்ந்தமாறியாக
பொருளாதாரவளர்ச்சி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் சுற்றுலா
(வருமானம், பயணிகளின்வருகைகள்), வெளிநாட்டு நேரடிமுதலீடு,
ஊழியப்படை, சேமிப்பு, அரசசெலவு, மொத்தமூலதனஉருவாக்கம்
போன்றவைசாராமாறிகளாகவும் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றலாதொடர்பான
இரண்டு மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு பிற்செலவுசமன்பாடுகள்
உருவாக்கப்பட்டு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வின் முடிவுகளின்படி இரண்டுமாதிரிகளின் முடிவுகளும்
சுற்றுலாத்துறையானது பொருளாதார வளர்ச்சியில் புள்ளிவிபரரீதியாக
பொருண்மைத்தன்மையுடையது என்பதைக்காட்டுகின்றன.
அத்துடன்பிற்செலவு குணகமதிப்பான்களின்படி சுற்றுலாவானது
பொருளாதார வளர்ச்சியில் நேர்க்கணியத்தாக்கத்தைக் காட்டுகின்றது