DSpace Repository

நெல் உற்பத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் ஓர்சிறப்பு நோக்கு

Show simple item record

dc.contributor.author தர்சின, தா.
dc.date.accessioned 2021-11-03T06:13:48Z
dc.date.accessioned 2022-07-07T07:25:33Z
dc.date.available 2021-11-03T06:13:48Z
dc.date.available 2022-07-07T07:25:33Z
dc.date.issued 2018
dc.identifier.isbn 978-955-0585-11-3
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4123
dc.description.abstract உலகளாவிய நோக்கில் அனேகமான நாடுகளில் நெற்பயிரானது பிரதானமான உணவுப்பயிராக திகழ்கின்றது. இலங்கையும் ஒரு விவசாய நாடாகக் காணப்படுவதோடு, கிராமிய விவசாயத்துறைக்கு அதிக பங்களிப்புக்களை வழங்கும் நாடாகவும் விளங்குகின்றது. நாட்டின் கிராமிய விவசாயக் கொள்கையானது உணவுப்பாதுகாப்பினையும், கிராமிய மக்களின் வருமானத்தை அதிகரித்து வறுமையைக் குறைப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்குகாலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பொருளியல் பார்வையிலும் சரி ஜதார்த்த உற்பத்தி உலகிலும் சரி எந்தவொரு உற்பத்திக்கும் உள்ளீடு என்பது அடிப்படையானதும், அத்தியாவசியமானதுமாகும். அந்தவகையில் நெல் உற்பத்திக்கான உள்ளீடுகளாக விளைநிலம், விதைநெல், உரம், பீடைகொல்லி, நீர்ப்பாசனம், ஊழியம், இயந்திரம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான நெல் உற்பத்திக்கான உள்ளீடுகள் நெல் உற்பத்தியான வெளியீட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை பிற்செலவு சமன்பாடு ரீதியாக அறியும் நோக்கில் 'நெல் உற்பத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு : மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலர்பிரிவில் ஓர் சிறப்பு நோக்கு' என்ற தலைப்பில் இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆய்விற்காக, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை, ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய கமநல கேந்திர நிலையங்களிற்குட்பட்ட வகையில் 2015 சிறுபோக நெற்பயிர்ச்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிலிருந்து 104 விவசாயிகள் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நெல் உற்பத்தியை சார்ந்த மாறியாகவும், விதைநெல்லின் இனம், உரப்பாவனையின் அளவு, பீடைகொல்லிப் பாவனைக்கான செலவு, வாடகைக்கு அமர்த்தும் ஊழியத்திற்கான செலவு இயந்திரப்பாவனைக்கான செலவு மற்றும் விவசாயிகளின் விவசாய அனுபவம் என்பவற்றை சாரா மாறிகளாகவும் கொண்டு, கொப் - டக்ளஸ் உற்பத்தி தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பல்மாறிப்பிற்செலவு ஆய்வு முறையின் ஊடாக தரவுப்பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின்படி, மாற்று மாறியாக கொள்ளப்பட்ட விதை நெல் இனத்தில் டீபு-366 என்ற வகை விதை நெல்லானது நெல் உற்பத்தியுடன் ஐந்து சதவீத நேர்க்கணிய பொருண்மைமட்டத்தை கொண்டுள்ள அதேவேளை உரப்பாவனையின் அளவு, பீடைகொல்லிக்கான செலவு, இயந்திரப்பாவனைக்கான செலவு மற்றும் விவசாயிகளின் விவசாய அனுபவம் என்பன நெல் உற்பத்தியுடன் ஒரு சதவீத நேர்க்கணிய பொருண்மைமட்டத்தை கொண்டுள்ளன. ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சாரா மாறியான வாடகைக்கு அமர்த்தும் ஊழியத்திற்கான செலவு மாத்திரம் நெல் உற்பத்தியுடன் பொருண்மைத்தன்மையற்றதாகக் காணப்படுகின்றது. அத்துடன் கு-பெறுமதி புள்ளிவிபர ரீதியாக பொருண்மைத்தன்மையுடையதாக காணப்படுகின்றது. எனவே இங்கு மேற்கொள்ளப்பட்ட பல்மாறிப்பிற்செலவு ஆய்வு முறையில் முழுமொத்த மாதிரியும் புள்ளிவிபர ரீதியாக பொருண்மைத்தன்மையுடையதாக காணப்படுவதால் ஆய்வு முடிவுகளை ஏற்கக்கூடியதாகவுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject உள்ளீடு en_US
dc.subject உரப்பானை en_US
dc.subject ஊழியத்திற்கான செலவு en_US
dc.subject பீடைகொல்லி en_US
dc.subject நெல் உற்பத்தி en_US
dc.subject விவசாயம en_US
dc.title நெல் உற்பத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் ஓர்சிறப்பு நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record