Abstract:
உலகின் பொதுவான தொடர்பாடல் ஊடகமாக
விளங்கும் இசை தொலைத்தொடர்பு சாதனங்களின் வருகைக்கு ஒரு
மூலகாரணமாக விளங்குகின்றது. முற்காலத்தில் தொடர்பாடலுக்கு
இசையும், இசைக்கருவிகளும் ஊடகமாகத் தொழிற்பட்டதை நூ
ல்களும், இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. பழைய nhதலைத்தொடர்பு
முறைகள் புதிய தொலைத்தொடர்பு சாதனங்கள், அவற்றால் ஏற்பட்ட
நன்மைகள், தீமைகள், பிரச்சினைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள,;
நவீன தொழில்நுட்ப முறையால் புதிதாக வந்து கொண்டிருக்கின்ற
நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், அவை எந்த வகையில்
இசைவளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும்
நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. நவீன
தொடர்பாடல் முறையானது இசை வளர்வதற்குப் பெரும் பங்காற்றுவதுடன்
மட்டுமன்றிக் கொலை, சுற்றாடல் மாசுறுதல், அணுவாயுதங்களின் வளர்ச்சி,
கலை, கலாச்சாரச் சீரழிவு என்பவற்றால் மனிதனை அழிவுப்பாதையிலும்
இட்டும் செல்கிறது. எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய தொலைத்தொடர்பு
சாதனங்களையும், தொலைத்தொடர்பு முறைகளையும் பேணி இசையை
மேலும் வளர்ச்சி பெறச்செய்வதுடன் பாதுகாக்க வேண்டும்.