dc.description.abstract |
நடைமுறை உலகில் சமூகங்களுக்கிடையே
பிரச்சினையைத் தோற்றுவிக்கும் விடயமாக அபிவிருத்தியில் இடரீதியான
சமமின்மை காணப்படுகின்றது. இத்தகைய சமமின்மை தோற்றம்
பெறுவதற்கு அவ்வவ் பிரதேசங்களில் காணப்படும் பௌதிக, மானிட,
அரசியல், வரலாற்று மற்றும் சூழல் சார் காரணிகள் காரணமாக
உள்ளன. பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வளர்ந்துவரும் பிரதேசமாக
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் காணப்படுகின்ற போதிலும் இடரீதியான
அபிவிருத்தி செயற்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் நிலவப்பெறுகின்றமை மூலம்
வளம் மிக்க பிரதேசங்கள் மேலும் வளமானவையாகவும் பின்தங்கிய
பிரதேசங்கள் மேலும் பின்தங்கிய பிரதேசங்களாக மாற்றமடைகின்றன.
இத்தகைய இடரீதியான ஏற்றத்தாழ்வு சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு
இவ் ஆய்வானது யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் அபிவிருத்தி சார்
செயற்பாடுகளில் இடரீதியான வேறுபாடுகளை மதிப்பிடுதல் எனும்
இலக்கோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி இலக்கினை அடைவதற்கு
அபிவிருத்தியில் இடம்சார் வேறுபாடுகளை இனங்காண்பதற்கான
கட்டளைக் கற்களை அடையாளம் செய்தல், சமூக, பொருளாதார மற்றும்
குடியியல் சுட்டிகளின் அடிப்படையில் இடம்சார் அபிவிருத்தி வேறுபாடுகளை
அடையாளம் செய்தல் மற்றும் முழுமையான அபிவிருத்தியில்
பிராந்திய வேறுபாட்டினை மதிப்பிடுதல் ஆகிய நோக்கங்களையும்
கொண்டுள்ளது. மேற்படி நோக்கங்களை எய்துவதற்கு பல்வேறு
மூலங்களில் இருந்து முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள்
சேகரிக்கப்பட்டன. முதல்நிலைத் தரவுகள் புPளு, கட்டமைக்கப்படாத
நேர்முகக் கலந்துரையாடலுக்கூடாகவும் இரண்டாம் நிலைத் தரவுகள்
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களிடமிருந்தும்
பெற்றுக் கொள்ளப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் புஐளு மற்றும் கூட்டு
சுட்டெண் புள்ளிவிபர முறைகளுக்கூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இவ் ஆய்வின் முடிவில் 68 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சமூகக்
குறிகாட்டியில் உயர்மட்டத்தில் காணப்படும் பிரதேசங்கள் பொருளாதார
அபிவிருத்தியில் இடைமட்டம், தாழ் மட்டத்திலும் பொருளாதார
அபிவிருத்தியில் உயர்மட்டத்தில் காணப்படும் பிரதேசங்கள் சமூக,
குடியியல் அபிவிருத்தியில் இடைமட்டம் மற்றும் தாழ்மட்டங்களில்
காணப்படுவது அவதானிக்கப்பட்டது. முழுமையான அபிவிருத்தியில் ஏழு
பிரதேசங்கள் மாத்திரமே உயர்மட்ட அபிவிருத்தியில் காணப்படுகின்றன.
46 பிரதேசங்கள் தாழ்மட்ட அபிவிருத்திப் பிரதேசங்களாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படும்
வறுமை, வருமான மட்டம், சுகாதார மையங்கள், வர்த்தக நிலையங்கள்,
கல்வியறிவு மற்றும் தொழில்நிலை என்பன அபிவிருத்தியில் இடரீதியான
ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்களாக வெளிக்காட்டப்பட்டுள்ளன.
இவ் ஆய்வின் ஊடாக யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் அபிவிருத்தியில்
இடரீதியான வேறுபாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஆய்வானது
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இலங்கையிலும் அபிவிருத்தியில் இடரீதியான
ஏற்றத்தாழ்வுகள் சம்மந்தமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு
கொள்வதற்கான ஒரு மைல்கல்லாக இருப்பதுடன் அபிவிருத்தியில்
இடரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு சமமின்மையைக்
களைந்து சிறந்த நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை
வழங்கும் என தெளிவாகக் கூறக்கூடியதாகவும் எதிர்பார்க்கக் கூடியதாகவும்
இருக்கும். |
en_US |