Abstract:
அறியாமை இருளிலிருந்து அறிவென்ற
வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்களே ஆசிரியர்களாவர். இத்தகைய
ஆசிரியர்கள் பலதுறை ஆற்றல்களையும், வாழ்நாள் நீட்சியைக் கொண்ட
கல்வியை உடையோராகவும் திகழ வேண்டும். நவீன மாற்றங்களுக்கு
ஏற்ப தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களின்
நம்பிக்கைக்குரியவர்களாக திகழ வேண்டும்2. அந்த நம்பிக்கையை
மாணவர்கள் மத்தியில் உருவாக்குவது ஆசிரியர்களின் கற்பித்தல்
முறைகளேயாகும். எனவே ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள்
வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். கற்பித்தல் வினைத்திறனின்
நவீன உள்ளடக்கமே கல்வித்தொழில்நுட்பம் எனப்படும்1. எவ்வாறு
ஒரு ஆசிரியர் கல்வித்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமது
கற்பித்தலை வினைத்திறனாக்குகின்றனர் என்பதை அறிவதற்காக
கற்பித்தல் வினைத்திறன் மேம்பாட்டில் கல்வித்தொழில்நுட்பத்தின்
பயன்பாடு எனும் தலைப்பில் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. இவ் ஆய்வு
மட்டக்களப்பு, மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயங்களில் தெரிவு
செய்யப்பட்ட 20 பாடசாலைகளின் க.பொ.த உயர்தர வகுப்புக்களை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அளவை நிலை
ஆய்வாகும். இப் பாடசாலைகளின் அதிபர்கள் 20, க.பொ.த உயர்தர
வகுப்புக்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் 225, உயர்தர
வகுப்பில் சகல துறை சார்ந்தும் 350 மாணவர்களும் எழுமாறாகத்
தெரிவு செய்யப்பட்டு மாதிரிகளாக்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன.
மாதிரிகளிடமிருந்து தரவுகளைப் பெற்றுக்கொள்ள வினாக்கொத்துகள்
தயாரிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் ஆiஉசழளழகவ ழககiஉந
நுஒஉநட பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், உருக்கள் மூலம்
வெளிப்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் முடிவுகளாக கற்பித்தல் வினைத்திறன்
மேம்பாட்டில் கல்வித்தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறைந்தளவிலே
காணப்படுகின்றன, கல்வித்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
கற்பித்தலை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களிடத்தே மகிழ்ச்சிகரமான
கற்றலை ஏற்படுத்த முடிகின்றது, கல்வித்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
கற்பித்தலை மேற்கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கு பாடசாலைச் சமூகம்
பூரண ஒத்துழைப்பினை வழங்கவில்லை, வகுப்பறைக் கற்பித்தலில்
ஆசிரியர்கள் கல்வித்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பல
பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர் எனும் முடிவுகள் பெறப்பட்டன.