Abstract:
இலங்கையின் வட்டிவீதங்கள் தளம்பும் போக்கினைக்
கொண்டு காணப்படுவதனால் இவை எவ்வாறு பொருளாதார வளர்ச்சியில்
தாக்கம் செலுத்துகின்றன என்பது கண்டறியப்பட வேண்டியதாகும்.
இவ்வாய்வில் சேமிப்புக்கான வட்டிவீதங்கள், கடனுக்கான வட்டிவீதங்கள்,
பொருளாதார வளர்ச்சி வீதங்கள் போன்ற பேரினப்பொருளாதார
மாறிகளின் நீண்டகாலத்தொடர்பு பரீட்சிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்பினைப்
பரீட்சிப்பதற்காக 1990-2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய
வருடாந்த காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்
மாறிகளுக்கிடையிலான தொடர்புகளைப் பரீட்சிப்பதற்காக வரைபடங்களும்
பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலில், கோட்டு
வரைபடங்கள், சிதறல் வரைபடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திப்
பரீட்சித்த போது சேமிப்புக்கான வட்டிவீதங்களுக்கும், பொருளாதார
வளர்ச்சிக்குமிடையில் நேர்த்தொடர்பும், கடனுக்கான வட்டிவீதங்களுக்கும்,
பொருளாதார வளர்ச்சிக்குமிடையே எதிர்த்தொடர்பும் காணப்படுவது
கண்டறியப்பட்டது. இச்சமநிலைத் தொடர்பினை உறுதிப்படுத்திக்கொள்ள
அலகு மூலசோதனை(ருnவை சுழழவ வுநளவ),ஒருங்கிணைவு
பொருளியலளவை நுட்பம்(ஊழ-ஐவெநசபசயவழைn யுயெடலளளை),
வழுச்சரிப்படுத்தல் பொறிமுறை(நுசசழச ஊழசசநஉவழைn ஆழனநட)
போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பகுப்பாய்வுப்
பெறுபேறுகளின் பிரகாரம் கடனுக்கான வட்டிவீதங்களில் ஏற்படும் ஒரு வீத
அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தில் 0.5552 வீதக் குறைப்பினை
ஏற்படுத்துகின்றது. அத்தோடு சேமிப்புக்கான வட்டி வீதத்தில் ஏற்படும்
ஒரு வீத அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தில் 0.7852 வீத
அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே பொருளாதார வளர்ச்சிக்கும் வட்டி
வீதங்களுக்கும் நீண்ட காலத்தில் தொடர்பு காணப்படுகின்றது. எனவே
இலங்கைப் பொருளாதார வளர்ச்சியில் வட்டிவீதங்கள் சக்தி வாய்ந்த
செல்வாக்கினைச் செலுத்துகின்றன எனும் முடிவுக்கு வரலாம். ஆதலால்,
பொருளியலளவை நுட்ப முறைகளால் பரீட்சிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து
பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், இம்மாறிகளுக்கிடையிலான
குணகப்பெறுமதியைப் பயன்படுத்தி கொள்கையாக்கங்களைச் செய்வது
சிறந்தது. அதாவது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
வகையில் வட்டிவீதக் கொள்கைகளைப் பேணுவது சிறந்தது.