dc.description.abstract |
எமது நாட்டில் பாடசாலை முறைசார் கல்வியில்
க.பொ.த.(சாஃத) பரீட்சை முக்கியமான ஒரு பரீட்சை ஆகும். பதினொரு
வருட பாடசாலைக் காலத்தின் அறுவடையாகவும் இது கருதப்படுகின்றது.
க.பொ.த.(உஃத) வகுப்பிற்கு தகைமை பெறுதல், தொழினுட்ப கல்லூரிக்கு
அனுமதி பெறல், சிறிய தொழில்வாய்ப்புக்கள் பெறல் என்பனவற்றிற்கு
க.பொ.த.(சாஃத) பரீட்சையின் அடைவு மிக முக்கியமானதாகும். ஆயினும்
க.பொ.த.(சாஃத) பரீட்சை அடைவுகள் திருப்திகரமான நிலையில்
இல்லை என்பதனைப் பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரங்கள் எடுத்துக்
காட்டுகின்றன. பரீட்சைக்குத் தோற்றியோரில் சுமார் 60மூ ஆனோர்
மாத்திரமே க.பொ.த.(உஃத) வகுப்பிற்கு தகைமை பெறுகின்றனர்
எனவும் தாம் தோற்றும் அனைத்துப் பாடங்களிலும் சுமார் 5மூ ஆனோர்
சித்திபெறத் தவறுகின்றனர் எனவும் முக்கிய பாடமான கணித பாடத்தில்
சுமார் 50மூ ஆனோரே சித்திபெறுகின்றனர் எனவும் தாய் மொழியான
தமிழ்மொழிப்பாடத்தில் சுமார் 25மூ ஆனோர் சித்திபெறத் தவறுகின்றனர்
எனவும் இப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தாய் மொழிப் பாடத்தில்
இத்தகைய வீழ்ச்சி நிலை எதிர்காலத்தை பாதிப்படையச் செய்வதோடு;
மாணவர்களின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளிலும் தாக்கம் செலுத்தக்
கூடியது. இதன்காரணமாக பரீட்சை அடைவுகளை மேம்படுத்தல்,
மாணவர்களின் திறன்களை விருத்தி செய்தல்என்பனவற்றைக்
கருத்தில் கொண்டும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் 2007ஆம்
ஆண்டு புதிய கலைத்திட்டம் தேசிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இக்கலைத்திட்டமானது 21ஆம் நூற்றாண்டின் இடைநிலைப்
பாடசாலைக்கான முதலாவது கலைத்திட்ட மறுசீரமைப்பாகக் கருதப்பட்டது.
இக்கலைத்திட்ட மாற்றத்திற்கு அமைவாக 2008ஆம் ஆண்டு முதல்
தடவையாக க.பொ.த.(சாஃத) பரீட்சை நடாத்தப்பட்டது. இதுவரையில்
2015ஆம் ஆண்டு வரை எட்டு வருடங்கள் இப்பரீட்சை நடைபெற்று
முடிந்துள்ளது. இக்கலைத்திட்டமானது க.பொ.த.(சாஃத) பரீட்சையில்
தமிழ்மொழிப்பாட அடைவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
என்பதனை ஆராய்வதே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் ஆய்வுப் பிரதேசமாகக் கருதப்பட்டு அளவை ஆய்வு
வடிவம் பயன்படுத்தப்பட்ட இவ் ஆய்வில் க.பொ.த.(சாஃத) பரீட்சையில்
மாணவரின் அடைவைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணிகளான
தமிழ்மொழிப் பாடத்தில் சித்தி பெற்றவர்களின் சதவீதங்கள், தமிழ்மொழிப்
பாடத்தின் கூட்டல் இடை என்பன கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
அளவுசார், பண்புசார் தரவுகள் இவ் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தரவுகள் யாவும் ளுPளுளு ளுழகவறயசநமூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
பகுப்பாய்வு மூலம் இப்புதிய கலைத்திட்ட அறிமுகத்தின் பின்னர்
தேசிய ரீதியில் க.பொ.த.(சாஃத) பரீட்சை அடைவில் தமிழ்மொழிப்
பாடத்தின் கூட்டல் இடைப் பெறுமானமும் சித்தி பெற்றவர்களின்
சதவீதங்களும் குறைவடைந்து செல்வதனையும அறிய முடிகின்றது.
மேலும் கலைத்திட்ட அறிமுகத்தின் முன்னரும் பின்னரும் தமிழ்மொழிப்
பாடத்தில் சித்தி பெற்றவர்களின் சதவீதங்களில் ஏற்பட்ட மாற்றம்
0.05 மட்டத்தில் பொருண்மையாகவுள்ளமையும் அறியப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் முஸ்லிம்
மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில்
மாத்திரம் தமிழ்மொழிப் பாடத்தில் சித்தி பெற்றவர்களின் சதவீதங்கள்
அதிகரித்துச் செல்ல ஏனைய நான்கு கல்வி வலயங்களிலும் ஒழுங்கற்ற
விதத்தில் குறைவடைந்து செல்கின்றன என்பதனையும் இவ் ஆய்வு
மேலும் வெளிப்படுத்தியது.பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்காகக்
கொண்டு க.பொ.த.(சாஃத) பரீட்சையில் தமிழ்மொழிப் பாட அடைவை
மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |