dc.description.abstract |
ஆய்வானது தம்புள்ள விவசாய சந்தையின்
திறன்களை முன்னேற்றுவதன் மூலம் பிராந்திய வளர்ச்சிக்கு பங்களிப்பு
செய்யும் என்பதை ஆய்வு செய்கின்றது. இலங்கையில் மத்திய
வேளாண்மை மாவட்டமாக தம்புள்ளை காணப்படுகின்றது. தம்புள்ள
விவசாய சந்தை இலங்கையின் மிக பெரிய விவசாய சந்தையாகும்.
தம்புள்ள விவசாய சந்தை அண்டை நகரங்கள், கிராமங்களுக்கு தனது
சேவையை வழங்குகின்றது. இவை பாரம்பரிய விவசாய உற்பத்திகளை
ஊக்குவிக்கக்கூடிய வகையில் பொருட்களுக்கான கேள்வியை சந்தையில்
உருவாக்குகின்றது.ஜ1ஸஇவ் ஆய்விற்காக தம்புள்ள நகரத்தின் விவசாய
சந்தை பகுதி ஆய்வு பிரதேசமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி
இலங்கையின் முக்கிய மையப்பகுதியில் அமைந்துள்ளதோடு இது
இலங்கையின் மாற்றீட்டு மையம் ஆகவும் இயக்கத்தன்மை வாய்ந்த
பல்வேறு வகைப்பட்ட துடிப்பான வர்த்தக பொருளாதார மையமாகவும்
விளங்குகின்றது.
இவ் ஆய்வானது தம்புள்ள விவசாய சந்தை எவ்வளவு தூரமான சமூக,
பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பு செய்கின்றது என்பதனையும்
கிடைக்கப் பெறுகின்ற பொருளாதார ரீதியிலான நன்மைகள், சந்தை
உருவாவதற்கு செலவு செய்யப்பட்ட முதலீட்டுக்கு ஏற்ப வருமானம்
கிடைக்கின்றதா? மற்றும் அங்குள்ள அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்
போன்றவற்றினை மதிப்பீடு செய்வதனை நோக்கமாக கொண்டு
மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வின் நோக்கங்களை அடைவதற்குத்
தேவையான தம்புள்ள விவசாய சந்தையின் தற்போதைய நிலைமைகள்,
பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள், வர்த்தக நடவடிக்கைகள்,சந்தையினால்
கிடைக்கும் வருமானம் போன்ற தரவுகள் நேரடி அவதானிப்பு,
வினாக்கொத்து, நேர்காணல் போன்ற முதலாம் நிலைத்தரவுகள் மூலமும்
இரண்டாம் நிலைத்தரவுகள் மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்
ஆய்விற்கு முக்கிய தரவு சேகரிப்பு முறையான வினாக்கொத்து மூலம்
தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு சமூக விஞ்ஞான புள்ளிவிபரவியல்
பகுப்பாய்வு நுட்பம் (ளுPளுளு) எனும் கனனி மென்பொருளைப் பயன்படுத்தி
பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் விபரண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இவ் ஆய்வின் கண்டுபிடிப்புக்களாக தம்புள்ள விவாசாய சந்தையின்
சேவைப்பகுதியாக இலங்கையின் அனைத்து மாகாணங்களும்
காணப்படுகின்றது.ஜ2ஸ இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்
போதியளவு வழங்கப்பட்டு காணப்பட்டாலும் வினைத்திறனை
அதிகரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைப்பாடுகளும்
காணப்படுகின்றன. தம்புள்ள விவசாய சந்தைக்கு பொருட்களை
கொண்டு வருகின்ற விவசாயிகள், சேகரிப்பாளர்கள் மற்றும் பொருட்களை
கொள்வனவு செய்கின்ற மொத்த, சில்லறை விற்பனையாளர்கள்
பொருளாதார ரீதியான வருமானங்களை பெற்று நன்மையடைகின்றனர்.
தம்புள்ள விவசாய சந்தையிலிருந்து முதலீட்டுக்கு ஏற்ப ஆறுமடங்கு
வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதோடு சந்தை குத்தகைக்கு விடப்பட்டு 72
மில்லியன் ரூபா வருமானமும் கிடைக்கப் பெறுகின்றமை போன்றனவும்
கண்டறியப்பட்டுள்ளன.ஜ3ஸ இவற்றை அடிப்படையாகக் கொண்டு தம்புள்ள
விவசாய சந்தையின் வினைத்திறனான செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான
பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வின் முடிவாக தம்புள்ள விவசாய சந்தை குறிப்பிட்ட ஒரு
பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது இலங்கை முழுவதும் சேவையை வழங்கும்
மையம் என இனங்காணப்பட்டுள்ளது |
en_US |