dc.description.abstract |
இவ் ஆய்வானது அனர்த்தங்களுக்கு
தாக்குப்பிடிக்கக்கூடிய நகர வடிவமைப்பு அணுகுமுறையானது
இரத்தினபுரியில் எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகின்றது
என்பதை மதிப்பீடு செய்கின்றது. இவ் ஆய்வானது இலங்கையில்
பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் நிலச்சரிவு அனர்த்தத்திலிருந்து
ஸ்திரத்தன்மை மிக்க அனர்த்தங்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய
நகர வடிவமைப்பினை இரத்தினபுரி மாநகரப்பகுதியில்
மதிப்பீடு செய்வதுடன் அந்நகரப்பகுதியை அனர்த்தத்திலிருந்து
தாக்குப்பிடிக்கக்கூடிய வகையிலான உருவாக்க மற்றும்
அமுல்ப்படுத்தல் செயற்பாடுகளுக்கான இயக்கும்
செயலமைவுத்திட்டம் ஜஆநஉhயnளைஅஸ ஐ முன்மொழிவதனை
நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் ஸ்திரத்தன்மை மிக்க அனர்த்தங்களுக்கு
தாக்குப்பிடிக்கக்கூடிய நகர வடிவமைப்பு எனும் இவ்
ஆய்விற்காக சேகரிக்கப்பட்ட தரவுகளானவை பல வழி
முறைகளினூடாக ஆய்வின் பகுப்பாய்வு நோக்கங்களின்
அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில்
நேரடி அவதானிப்பின் மூலமும், கட்டமைக்கப்பட்ட தகவல்
தருணர் நேர்காணல் மூலமும், நிறுவனம் பொறிமுறைகளில்
பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களிடமிருந்தும் பெறப்பட்ட
தரவுகளையும், தகவல்களையும் ஆதாரமாகக்கொண்டு
விபரணப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாநகரப்பகுதியின் நிலச்சரிவு அனர்த்த
அபாயப்பகுதிகள் அனர்த்த தாக்குப்பிடித்தல் அணுகுமுறைக்கு
முரணான பல்வேறு மனித செயற்பாடுகளான முறையற்ற
கட்டுமானச்செயற்பாடுகள், முறையற்ற நிலப்பயன்பாடுகள்,
அகழ்வு நடவடிக்கைகள், தன்னிச்சையான தற்காலிக
குடியிருப்பு, காடழிப்பு நடவடிக்கைகள், விவசாய செயற்பாடுகள்,
கலப்பு நிலப்பயன்பாடுகளால், ஆட்கொள்ளப்பட்டுள்ளமை
கண்டறியப்பட்டது.
இவை அனர்த்தத்திலிருந்தும் இறுதியாக திட்டங்கள்,
சட்டங்கள், திட்டமிடல் மற்றும் நிர்மாண ஒழுங்கு
விதிமுறைகள் என்பன குறித்த பிரதேசங்களில் அனர்த்தங்கள்
தொடர்பில் நிறுவனக்கட்டமைப்புசார் ரீதியில் தம்மகத்தே
அனர்த்தங்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய நகர வடிவமைப்பு
அணுகுமுறையினை தன்னகத்தே கொண்டிருப்பினும் அவை
அமுல்ப்படுத்தும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள அபிவிருத்திகள்
மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் குறைந்தளவிலான
வினைத்திறன் தன்மையினையே நிலச்சரிவு அனர்த்தங்கள்
தொடர்பில் அவதானிக்க முடிந்தது.
இப்பகுப்பாய்வின் அடிப்படையில் இலங்கையின்
ஸ்திரத்தன்மை மிக்க நிலச்சரிவு அனர்த்தங்களுக்கு
தாக்குப்பிடிக்கக்கூடிய நகர வடிவமைப்பு நிலைகள் மற்றும்
அவற்றினை வினைத்திறனாக பயன்படுத்தவதற்கான
நகர வடிவமைப்பு நுட்கங்கள் போன்ற விடயங்கள்
இனங்காணப்பட்டு இலங்கையில் தாக்குப்பிடிக்கக்கூடிய
நகர வடிவமைப்பு தொடர்பாக பின்பற்றப்படும் திட்டமிடல்
மற்றும் நிர்மாண ஒழுங்குவிதிகள் மற்றும் அணுமுறைகள்
மதிப்பிடப்பட்டு நகரப்பகுதிகளை அனர்த்தங்களிலிருந்து
தாக்குப்பிடிக்கக்கூடிய உருவாக்க ஜகுழசஅரடயவழைஸெ
மற்றும் அமுல்ப்படுத்தல் ஜஐஅpடநஅநவெயவழைஸெ
செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள், பரிந்துரைகளாக
நிலச்சரிவு அனர்த்தங்களிலிருந்து தாக்குப்பிடிக்கக்கூடிய
வகையிலே நகரினை வடிவமைக்கும் போது இரத்தினபுரி
மாநகரப்பகுதியில் ஏற்கனவே அபாய வலயங்களில்
காணப்படும் ஆபத்து நிலையில் உள்ள குடியிருப்புக்களை
வேறு பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட
வேண்டும், நிலச்சரிவு அனர்த்த அபாயப்பகுதிகளில்
காணப்படும் நிலச்சரிவு ஆபத்திற்குரிய கட்டுமானங்கள்
மற்றும் அனுமதிக்கப்படாத கட்டுமானங்கள் தொடர்பிலான
கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கைகள் எடுப்பது
தொடர்பில் உறுதிப்பபடுத்திக்கொள்ள வேண்டும், தேசிய
ரீதியில் காணப்படும் நிலப்பயன்பாட்டுக்கொள்கை மற்றும்
அபிவிருத்தி வழிகாட்டுதல்களை காலதேவைக்கு ஏற்ப
மறுசீரமைப்பு செய்தல் போன்ற பல்வேறு உருவாக்க மற்றும்
அமுல்ப்படுத்தல் செயற்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டு ஆய்வின்
இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளது |
en_US |