| dc.contributor.author | Lathanki, A. | |
| dc.contributor.author | Piratheeban, K. | |
| dc.date.accessioned | 2026-01-13T07:09:17Z | |
| dc.date.available | 2026-01-13T07:09:17Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11995 | |
| dc.description.abstract | வெளி மாவட்டங்களில் பணி புரியும் போது ஆசிரியர்களின் தொழில் சார் அர்ப்பணிப்பும் அவர்கள் குறித்த மாவட்டத்தில் தங்கி வேலை செய்யும் திறனும் சவாலுக்கு உள்ளாகிறது. அதேபோல் பாடசாலைகளுக்கான பொதுப் போக்குவரத்து அற்ற தன்மையானது ஆசிரியர்களின் தொழில் திருப்தியையும் தொழில்சார் அர்ப்பணிப்பையும் பாதிக்கின்றது. இந் நிலையில் வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களுள் வெளி மாவட்ட ஆசிரியர்கள் அதிகளவில் பணியாற்றும் வலயங்களுள் ஒன்றாகவும் பிரதேச ரீதியில் ஏறத்தாழ 75 சதவீதமான பாடசாலைகளுக்கு பொதுப் போக்குவரத்து வசதி குறைவாகக் காணப்படும் பாடசாலைகளை உள்ளடக்கிய சவால்கள் நிறைந்த வலயமாகவும் வவுனியா வடக்கு வலயம் உள்ளது. இப்பிரதேசத்தில் ஆசிரியகளின் தொழில்சார் அர்ப்பணிப்பு எந் நிலையிலுள்ளது மற்றும் தொழில்சார் அர்ப்பணிப்பில் அவர்களின் குடிசார் காரணிகளின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்வதை நோக்காகக் கொண்டு இவ் ஆய்வானது அளவறிமுறையில் அமைந்த குறுக்கு வெட்டு அளவை நிலை ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கு கற்பிக்கும் 784 ஆசிரியர்கள் ஆய்வுக் குடித்தொகையாகக் கொள்ளப்பட்டு படை கொண்ட விகிதாசார எழுமாற்று மாதிரியெடுப்பு நுட்பம் மூலம் 259 ஆசிரியர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். மூடிய வகை வினாக்களை மட்டும் கொண்ட வினா கொத்து தரவு சேகரிப்புக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதுடன் வினாக்கொத்தின் நம்பகமானது Cronbach’s alpha குணகத்தைப் (α= .923)பயன்படுத்தியும் தகுதியானது உருப்படி-மொத்த இணைபு முறையைப் பயன்படுத்தியும் உறுதிப்படுத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆசிரியரிகளின் தொழில்சார் அர்ப்பணிப்பு தற்போது எந் நிலையிலுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக விபரணப் புள்ளிவிபரவியல் நுட்பமும், தொழில்சார் அர்ப்பணிப்பில் தெரிவுசெய்யப்பட்ட குடிசார் காரணிகளின் செல்வாக்கு எவ்வாறுள்ளது என்பதை ஆராய்வதற்காக அனுமான புள்ளிவிபரவியல் நுட்பங்களாகிய Mann Whitney U Test> Kruskal-Wallis H Test ஆகியனவும் பயன்படுத்தப்பட்டன. இவற்றிலிருந்து வவுனியா வடக்குக் கல்வி வலய ஆசிரியர்களின் தொழில்சார் அர்பணிப்பானது தற்போது உயர்ந்த நிலையில் உள்ளது (M = 3.63> SD = 0.70) என்றும் அத் தொழில்சார் அர்ப்பணிப்பில் ஆசிரியர்களின் குடிசார் காரணிகளான பால் நிலை (U = 8170.000 > p = 0.72), திருமண நிலை (U=7684.00> p = 0.27) மற்றும் சேவைக்கால வேறுபாடு (H = 0.271> p = 0.90) என்பவை பொருண்மையான தாக்கம் செலுத்தவில்லையென்றும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஆசிரியர்களின் தொழில்சார் அர்ப்பணிப்பில் தெரிவு செய்யப்பட்ட குடிசார் காரணிகள் மூன்றும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதால் இப் பிரதேசம் சார்பாக வேறு குடிசார் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனவா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Jaffna Science Association | en_US |
| dc.subject | தொழில்சார் அர்ப்பணிப்பு | en_US |
| dc.subject | ஆசிரியர்கள் | en_US |
| dc.subject | தொழில்சார் பிரயாண விளைவு | en_US |
| dc.title | ஆசிரியர்களின் தொழில்சார் அர்ப்பணிப்பில் குடிசார் காரணிகளின் செல்வாக்கு | en_US |
| dc.type | Research abstract | en_US |