| dc.description.abstract |
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் COVID 19 தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்நிலை, எண்மியச் செயற்பாடுகள் கற்றல் கற்பித்தலில் அதிகரித்த நிலையில் கலப்புக்கற்பித்தலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. எனினும் கலப்புக்கற்பித்தல் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்காவிடின் ஆசிரியர்கள் கலப்புக்கற்பித்தலை கற்பித்தல் பணிச்சுமைமிக்க முறையாக கருதுகின்ற நிலையானது கற்றல் கற்பித்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்ற வகையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது. இக் கற்பித்தல் முறையை அமுல்படுத்துவதற்கான கலப்புக்கற்பித்தல் பணிச்சுமை தொடர்பாக ஆசிரியர்களின் புலக்காட்சி எவ்வாறுள்ளது மற்றும் அக் கலப்புக்கற்பித்தல் பணிச்சுமை தொடர்பான புலக்காட்சியில் அவர்களுடைய குடிசார்மாறிகள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை ஆராயும் நோக்கில் அளவறி அணுகுமுறையில் அமைந்த குறுக்குவெட்டு அளவைநிலை ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 118 விஞ்ஞான பாட ஆசிரியர்களை ஆய்வுக் குடித்தொகையாகக் கொண்டு தொகை மாதிரியெடுத்தல் முறையில் மூடியவகை வினாக்களை மாத்திரம் கொண்ட வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டு (Cronbach's Alpha .66) சேகரிக்கப்பட்ட 106 மாதிரிகளின் (90%) தரவுகள் விபரணப்புள்ளி விபரவியல் முறையான இடை, நியம விலகல் மற்றும் அனுமானப்புள்ளி விபரவியல் முறைகளான One-Way ANOVA test> Independent sample t-test> Mann-Whitney U test> Kruskal-Wallis H test என்பவற்றைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவ் ஆய்வில், கலப்புக்கற்பித்தல் பணிச்சுமை தொடர்பான புலக்காட்சி உயர்ந்தளவில் காணப்படுவதுடன் (M=3.70 >SD=37) அதனுடைய பரிமாணங்களான பாட முன்னாயத்த பரிமாணம்(M=4.02>SD=.54) கற்பித்தல் பரிமாணம் (M=3.45>SD=.54) மற்றும் மதிப்பீட்டு பரிமாணம் (M=3.74>SD=.50) தொடர்பான புலக்காட்சியும் உயர்வாகவே உள்ளது. அதேவேளை கல்வி வலயம் (F=1.28>t=-1.24>p=.22), பால்(F=2.15>t=-.36>p=.15), வயது (H=2.52>df=3>p=.47) ஆசிரியர் சேவைக்காலம்(F=1.52>df=2>p=.11)> ஆசிரியர் சேவைத்தரம் (H=2.36>df=2>p=.31) கல்வித்தகைமை(H=.32>df=2>p=.85), தொழிற்தகைமை (H=3.2>df=4>p=.53), திருமணநிலை (F<.01>t=.20>p=.84), நிகழ்நிலைப்பிரயோகம் (U=184.50>Z=-.33>p=.75), தகவல்பரிமாற்றம் (F=1.09>t=1.84>p=.07), கலப்புக்கற்பித்தல் தொடர்பான பயிற்சி (F=.08>t=1.45>p=.15), ஆகிய குடிசார் மாறிகள் கலப்புக்கற்பித்தல் பணிச்சுமை தொடர்பான ஆசிரியர்களின் புலக்காட்சியில் செல்வாக்குச் செலுத்துவதில்லை என்பதுடன் விடயமுன்னறிவு(F=1.30>t=2.84>p<.01) செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதும் இவ் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குடிசார் மாறிகள் செல்வாக்குச் செலுத்தாத போதிலும் விடயமுன்னறிவு செல்வாக்குச் செலுத்துவதாலும் கலப்புக்கற்பித்தலானது பணிச்சுமைமிக்கதென ஆசிரியர்கள் புலக்காட்சி கொள்வதால் இதற்கான காரணம் தொடர்பில் மேலதிகமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது. |
en_US |