Abstract:
நவீன மொழியியல் நோக்கில் இலக்கணம், இலக்கண மரபுகள் பற்றியும், இலக்கண மரபில்
ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலக்கணம்
என்றால் என்ன? இலக்கண மரபுகள் எவ்வாறு உருவாகின்றன? இலக்கண மரபுகளில்
மாறற் தது; கக் hன தேவை எனன் ? முதலிய வினாகக் ள் இகக் டடு; ரையில் விவாதிகக் பப் டுகினற் ன.
எழுதப்பட்ட இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளவையே இலக்கணம் என்றும், அவை
மீறபப் ட முடியாத விதிகள் எனறு; ம,; அதத் கைய நூலக் ள் இலல் hத மொழிகளுககு; இலகக் ணம்
இலi; ல எனறு; ம,; அதத் கைய நூலக் ளைப் படியாதவரக் ளுககு; இலகக் ணம் தெரியாது என்றும்
பொதுவாகக் கருதப்படுகின்றது. நவீன மொழியியல் இதனை ஏற்பதில்லை. மொழியின்
உள்ளார்ந்த அமைப்பே இலக்கணம் என்றும், இலக்கணம் இல்லாத மொழிகள் எவையும்
இல்லை என்றும், ஒரு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் சிறுவயதிலிருந்தே அந்த
மொழியின் அமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றனர் என்றும், அவ்வகையில் ஒரு
மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோருக்கு அம்மொழியின் இலக்கணம் நன்கு தெரியும்
என்றும் மொழியியலாளர் நிறுவியுள்ளனர். தாய்மொழியாளரின் மூளையில் பதிந்துள்ள
இந்த இலக்கணத்தை அக இலக்கணம் (ஐஅpடiஉவை புசயஅஅயச) என்றும் அவர்கள் அழைப்பர்.
இலகக் ணகாரரக் ள் தாயn; மாழியாளரின் மூளையில் பதிநது; ளள் இநத் அக இலகக் ணைதi; தப்
பகுபப் hயவு; செயது; , அதன் விதிகளைக் கணட் றிநது; நூலாக எழுதுவதையே நாம் பொதுவாக
இலகக் ணம் எனக் pறோம.; இதை மொழியியலாளர் புற இலகக் ணம் (நுஒpடiஉவை புசயஅஅயச) என்பர்.
இவ்வாறு எழுதப்படும் புற இலக்கணங்கள் இலக்கண ஆசிரியர்களின் தேவை, திறமை,
கருத்துநிலை, காலம் என்பனவற்றுக்கு ஏற்ப வேறுபடும். இவ்வாறு வௌ;வேறு இலக்கண
ஆசிரியர்கள் ஒரு மொழியின் இலக்கண அமைப்பை எவ்வாறு விளக்கிவந்துள்ளனர்?
எத்தகைய வகைப்பாடுகளை மேற்கொண்டனர்? எத்தகைய கலைச் சொற்களைப்
பயன்படுத்தினர் போன்ற விடயங்கள் இலக்கண மரபு எனப்படும். இவ்வகையில் ஒரு
மொழியின் இலக்கண மரபுகள் வேறுபடுவதைக் காண்கின்றோம். இவ்வாறு நோக்கும் போது
இலக்கண மரபு நிலையானது அல்ல. அது காலப்போக்கில் மாறக்கூடியது. தமிழ் இலக்கண
மரபும் அவ்வாறே மாறிவந்துள்ளது. தமிழ் இலக்கண ஆசிரியர் மத்தியில் சில பொதுத்
தன்மைகளும் வேறுபாடுகளும் இருப்பதை தொல்காப்பியம் முதல் தொன்னூல் விளக்கம்
வரை நாம் காணலாம். மொழி மாறும்போது இலக்கண அமைப்பும் மாறுகின்றது.
அதற்கேற்ப இலக்கண மரபிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பே. தமிழ் இலக்கண மரபைப்
புரிந்துகொள்வதற்கும் அதை வளப்படுத்துவதற்கும் மொழியியல் அறிவு அவசியமாகும்.