dc.description.abstract |
தற்போதைய இருபத்தோராம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒரு கருத்தியலாகக்
குடியுரிமை பற்றிய சிந்தனை மாறியுள்ளது. இன்றுவரை குடியுரிமை தொடர்பான
தெளிவான அறிவுப் பிரஜைகள் மதத்pயில் மிகவும் குறைநத் ளவிலேயே காணபப் டுகினற் து.
ஏனெனில் இவ் எணண்கக் ருவானது காலத்திற்கேற்ப் மாறற் மடைந்ததும் வளர்ச்சியடைந்தும்
வருகின்றது. பொதுவாகக் குடியுரிமை என்பது ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாகவோ,
குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறித்து நிற்கின்றது. இவ்வுரிமையில்
அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். சிவில், அரசியல், சமூக
குடியுரிமைகள் ஆரம்ப காலத்தில் அரசுகளிடையே முக்கியத்துவம் பெற்றன. இருப்பினும்
சமகாலத்தில் பிராந்தியக் குடியுரிமை, சர்வதேசக் குடியுரிமை, இரட்டைக் குடியுரிமை
என்பன முக்கியம் பெறுகின்றன. மனிதனின் சிறப்பான வாழ்விற்கு, குடியுரிமையானது
மிக அவசியமாகும். இலங்கையிலும் குடியுரிமை என்பது பல்வேறு பரிணாமங்களைக்
கொண்ட ஒன்றாகவும் குழப்பம் நிறைந்த ஒன்றாகவும் காணப்பட்டது. குறிப்பாக
இலங்கையில் குடியுரிமை தொடர்பான பிரச்சினை என்பது மிக அண்மைக் காலம்
வரையில் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் இரண்டாம்
நிலைத்தரவுகளை மையமாகக்கொண்டமைந்த இவ்வாய்வானது இலங்கையில்
குடியுரிமையின் பரிணாம வளர்ச்சியினையும் தற்காலத்தில் காணப்படும்
சிக்கல்களையும் விபரண ரீதியாகப் பகுப்பாய்வு செய்கின்றது. குடியுரிமைச் சட்ட
ஏற்பாடுகளின் பலம் மற்றும் பலவீனங்கள், நிலையான சமாதானத்தினைக் கட்டியெழுப்
புவதில் குடியுரிமை ரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்பன இவ்
வாய்வின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளன. |
en_US |