dc.description.abstract |
சிவனது லிங்க வடிவம் சதாசிவனது சூஷம வடிவமாகவே கொள்வது மரபு. சதாசிவமூர்த்தி
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களுடன்
விளங்குவார். இவ் ஐந்து முகங்களில் தோன்றியவர்களே சிவனது இருபத்தைந்து மூர்த்தி
பேதங்கள் ஆகும். சிவனது மூர்த்தங்கள் கலைக்கூறுகளைப் பிரதிபலிக்கும் கலைக்
களஞ்சியமாகும். இத்தெய்வ மூர்த்தங்களில் நடனத்தில் பிரயோகிக்கப்படும் அபிநயங்கள்
காணப்படுகின்றன. அதில் ஆங்கிகம், ஆஹார்யம், சாத்விகம் என்பவை அடங்கும். சிற்ப
அமைதிகளுடன் காணப்படும் முத்திரைகள், ஒவ்வொரு மூர்த்தங்களின் ஊடாகவும்
வெளிப்படும். சிவனது இம்மூர்த்தங்கள் கலைகள் மற்றும் தத்துவக் கருத்துக்களைப்
புலப்படுத்தி நிற்கின்றன. இம்மூர்த்தங்களில் உள்ள நிலைகள் ஒவ்வொன்றும்
நடனக்கூறுகளுடன் தொடர்புபட்டுள்ளதைக் காணலாம். இவற்றைக் காண்மியக்கலை
வெளிப்பாடுகளினூடாக இனங்கண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதிலும்
இம்மூர்த்தி பேதங்களில் காணப்படும் கைமுத்திரைகள் நடனத்தில் பிரயோகிக்கும்
முறைகளுடன் ஆராயப்படுகின்றன. சிற்ப சாஸ்திர மூலங்கள், மற்றும் நடன மூலங்கள்
கூறியதற்கமைவாக நடனத்துடன் நோக்குவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது.
சிவமூர்த்தங்களில் காணப்படும் நடனக்கூறுகளையும், இறைதத்துவங்களையும், இணைத்து
ஆராய்வதால் இவ்வாய்வு விபரண, மற்றும் பகுப்பாய்வாகவும், நடனமுத்திரைகளுடன்,
சிற்பமுத்திரைகளை ஒப்பு நோக்குவதால் ஒப்பீட்டாய்வாகவும் அமைகிறது. இவ்வாய்வின்
மூலம் சிவமூர்த்தங்களிலும் நடனத்திலும் காணப்படும் அழகியல் அம்சங்கள்
ஒன்றுக்கொன்று இணைந்துள்ளதையும் சமய, தத்துவ விடயங்கள் நடனக்கலையில்
பரதநடன உருப்படிகளூடாகவும், நாட்டிய நாடகங்கள் மூலமும் இழையோடியிருப்பதையும்
இனங்காட்ட முயல்கிறது. இறைமூர்த்தங்களினூடாக அபிநயங்களை வெளிக்கொணர்வதே
இவ்வாய்வின் முக்கிய அம்சமாகும். |
en_US |