DSpace Repository

வாசகர்களின் கலை இலக்கியத் திறனை மேம்படுத்தல் : 'கவிமுளரி' மின்னிதழ் வெளியீடு

Show simple item record

dc.contributor.author Pragash, M.
dc.date.accessioned 2025-01-10T06:57:02Z
dc.date.available 2025-01-10T06:57:02Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10969
dc.description.abstract கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொது நூலகமானது 2011 மார்கழி 10ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நூலகத்தினது விபுலானந்தர் வாசகர்வட்டத்தின் பெரும் ஒத்துழைப்புடன் பல வாசிப்பு சார்ந்த செயற்றிட்டங்களைத் திறம்பட நடாத்தி வருகின்றது. அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக 'பேத்தாழை விபுலானந்தர் கலை இலக்கிய மன்றம்' எனும் அமைப்பினை உருவாக்கி, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்து அதனூடாக இலக்கியம் மற்றும் கலைகள் சார்ந்த பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக மாணவர்களுக்கான விவாத அரங்குகள், கவியரங்குகள், நூல் வெளியீடுகள் போன்றவற்றை நடாத்தி வாசகர்களின் கலை இலக்கிய ஆர்வத்தினை மேம்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியத் துறையில் சிறப்பாக செயற்பட்டுவரும் ஒருவரை தெரிவுசெய்து, பேத்தாழை விபுலானந்தர் கலை இலக்கிய மன்றத்தின் சிறப்பு விருதான 'விபுலம்' விருதினை வழங்கி வருகின்றது. இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதே இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்துடன் இணைந்ததாக முகநூல் வாயிலாக தமது கவிதைபுனையும் திறனை வெளிக்காட்டிவரும் கவிஞர்களுக்கு ஒரு களத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு பேத்தாழை பொது நூலகத்தின் விபுலானந்தர் கலை இலக்கிய மன்றத்தினால் உருவாக்கப்பட்டதே 'கவிமுளரி' எனும் மின்னிதழாகும். பேத்தாழை பொது நூலகத்தின் வாசகர்கள் மாத்திரமல்லாது முகப்புத்தகங்களில் கவிதை புனையும் ஏனைய கவிஞர்களின் ஆக்கங்களையும் சேகரித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மின்னிதழாக வடிவமைத்து கலை இலக்கிய மன்றத்தின் முகப்புத்தக பக்கத்திலும், அதனது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பகிரப்படுகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Library, University of Jaffna en_US
dc.subject வாசகர் வட்டம் en_US
dc.subject கலை இலக்கிய மன்றம் en_US
dc.subject மின்னிதழ் en_US
dc.subject கவிதைத் தொகுப்பு en_US
dc.title வாசகர்களின் கலை இலக்கியத் திறனை மேம்படுத்தல் : 'கவிமுளரி' மின்னிதழ் வெளியீடு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record