| dc.contributor.author | Prabagar, V. | |
| dc.date.accessioned | 2025-01-10T06:51:17Z | |
| dc.date.available | 2025-01-10T06:51:17Z | |
| dc.date.issued | 2024 | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10968 | |
| dc.description.abstract | யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்திய நூல்களைச் சேகரித்து வைப்பதற்கு தனியான பிரிவொன்று (Indian corner) 11.12.2015அன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரிவின் முக்கிய நோக்கம், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதாகும். குறிப்பாகக் கலை, இலக்கியம், சமயம்,வரலாறு சார்ந்த துறைகளில் மாணவர்கள் எதிர்நோக்கிய நூல் பற்றாக்குறைக்கு தீர்வுகாண இப்பிரிவு உருவாக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ள பல நூலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இத் தேவையை பூர்த்திசெய்யும் முகமாக ஒரே இடத்தில் இந்தியா தொடர்பான அனைத்து வெளியீடுகளையும் பார்வையிடும் வசதியை வழங்குவது இப்பிரிவின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்நூற்சேகரிப்புப்பிரிவு தென்னாசியாவின் பெருமை மிகு அடையாளமாகவும், இந்தியத் தமிழரின் புலமைச் சொத்துக்களின் சேமிப்பு இடமாகவும் விளங்குகிறது. மேலும், இது மாணவர்களின் அறிவுத்தாகத்தைத் தணிக்கும் வரப்பிரசாதமாகவும், ஆய்வாளர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் களமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Library, University of Jaffna | en_US |
| dc.subject | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் | en_US |
| dc.subject | இந்திய நூற்சேகரிப்புச் சிறப்புப் பிரிவு | en_US |
| dc.subject | Indian corner | en_US |
| dc.title | யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் இந்திய நூற்சேகரிப்புச் சிறப்புப் பிரிவுச் செயற்றிட்டம் | en_US |
| dc.type | Conference paper | en_US |