DSpace Repository

இரண்டாம் வத்திக்கான் சங்கப் பின்னணியில் பொதுநிலையினரின் கடமைகளும் உரிமைகளும்

Show simple item record

dc.contributor.author Sailenthini, P.R.
dc.contributor.author Paul Rohan, J.C.
dc.date.accessioned 2023-06-05T06:39:21Z
dc.date.available 2023-06-05T06:39:21Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9515
dc.description.abstract பொதுநிலையினர் உரிமையும், கடமையும் கொண்ட முழு அங்கத்தவரென்றும், கிறிஸ்துவின் முப்பணிகளின் பங்காளிகளென்றும் அருங்கொடை பெற்று உலகிலே உரிமையுடன் செயற்படுபவர்கள் என்றும் இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினைகளின் ஊடாக அறிய முடிகின்றது. இதனடிப்படையில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பொதுநிலையினர் திருத்தூதுப் பணி பற்றிய கொள்கைகளையும், நடைமுறைகளையும் இதில் ஆராய்ந்ததில், திருச்சபை வரலாற்றில் இதுவரை 21 பொதுச் சங்கங்கள் கூட்டப்பட்டுள்ளன. 2ஆவது முறையாக வத்திக்கான் நகரில் கூட்டப்பட்ட இப் பொதுச்சங்கமே ~~2ஆவது வத்திக்கான் சங்கம்|| என அழைக்கப்படுகின்றது. 1962 முதல் 1965 வரை 4 அமர்வுகளாக நடைபெற்ற இப் பொதுச்சங்கத்தில் உலகெங்குமிருந்து 2900க்கு மேற்பட்ட ஆயர்கள் பங்கேற்றனர். இப்பொதுச்சங்கம் திருச்சபை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பொதுநிலையினரைப் பொறுத்தமட்டடில் ஒரு பொற்காலத்தை உருவாக்கித் தந்தது. திருச்சபைக்குப் புத்துணர்ச்சி வழங்கி புதியதொரு சிந்தனையை அளித்து ஆழமான பொருள் நிறைந்த விதத்தில் அது இவ்வுலகில் பணியாற்றிட வழிவகுத்தது. சங்கத்தின் இறுதியில் 16 ஏடுகள் வெளியிடப்பட்டன. அனைத்து ஏடுகளிலும் பொதுநிலையினரைப் பற்றிய புதிய சிந்தனை பிரதிபலிக்கப்பட்டிருந்தாலும், புதிய பொதுநிலையினர் இறையியலை 1.திருச்சபை 2.பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி 3.இன்றைய உலகில் திருச்சபை என்று மூன்று ஏடுகள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. 2 ஆம் வத்திக்கான் சங்கப் போதனைகளுக்கேற்பவும் இக்காலத்தின் தேவைகளுக்கேற்பவும் திருச்சபையின் புதிய சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டு 1983ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இறைவார்ததைப் பணியில், திருவழிபாட்டடில், மறைக்கல்விப் பணியில், குழும வாழ்வில், படைப்பைப் பாதுகாப்பதில், நற்செய்தி அறிவிப்பதில், பிரிந்த சபைகளுடன் உறவில், தலத்திரு அவையில், கிறிஸ்தவ ஒன்றிப்பில், பிற மத விசுவாசிகளுடனான உறவிலும் பணியிலும், பிறமறைகளின் மட்டில், பண்பாட்டுடனான உறவிலும் பணியிலும், சமூகத்துடனான உறவிலும் பணியிலும், பொருளாதாரத்துடனான உறவிலும் பணியலும் அரசியலுடனான உறவிலும் பணியிலும் சமூகத் தொடர்புக் கருவிகளுடனான உறவிலும் பணியிலும் மற்றும் கல்விப்பணியில் பொதுநிலையினரின் பங்களிப்புக்கள் சங்கஏடுகள் மற்றும் திருச்சபைச் சட்டத்தின் அடிப்படையில் பொதுநிலையினர் இயல்பு, தன்மை, உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை குறிப்பிடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இரண்டாம் வத்திக்கான் சங்கம் en_US
dc.subject பொதுநிலையினர் en_US
dc.subject உரிமையும் கடமையும் en_US
dc.title இரண்டாம் வத்திக்கான் சங்கப் பின்னணியில் பொதுநிலையினரின் கடமைகளும் உரிமைகளும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record