dc.description.abstract |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்கள் சமயத்துறையிலும் தாக்கத்தினைச் செலுத்தின. அச்சியந்திரத்தின் வருகை சமயக் கருத்தியல்களை சமூகத்தினை நோக்கிக் கொண்டு செல்ல வழிவகுத்தது. சைவசமயத்தின் அறிவார்ந்த தத்துவமான சைவசித்தாந்தத்தினை சமூகமயப்படுத்தல் பணியும் இந்த நூற்றாண்டிலிருந்தே ஆரம்பமாகிறது. இந்தப் பெரும்பணியினை காலத்திற்குக் காலம் பல்வேறு அறிஞர்கள் பல பரிமாணங்களில் ஆற்றி வந்திருக்கின்றார்கள். இத்தகைய அறிஞர்களில் பண்டிதர் மு. கந்தையாவின் பணியினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆதீனங்களிலும் அறிஞர்கள் சபையிலும் மட்டுமே இருந்த சைவசித்தாந்தத்தினை சாதாரண மக்களிடம் கொண்டு சென்ற அறிஞர்களில் மு. கந்தையா முக்கிய இடத்தினைப் பெறுகின்றார். மெய்கண்ட சாத்திரங்களுக்கான உரைகளை வரைவதையோ அந்த உரைகளுக்கு விளக்கங்களை மட்டும் அளிப்பதையோ தனது குறிக்கோளாகக் கொள்ளாமல் மெய்கண்டசாத்திரங்கள் கூறும் தத்துவக் கருத்துக்களை எளிமைப்படுத்தி மக்களுக்கு எளிதில் விளங்கக் கூடிய வகையில் கட்டுரைகளாகவும், நூன்முயற்சிகளாகவும், பொருள் பிரித்தறியக்கூடிய பிரபந்தங்கள், காவியங்கள் போன்ற இலக்கியங்கள் மூலமாகவும் சைவசித்தாந்தக் கருத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கின்றார்கள். அத்துடன் அச்சு வடிவங்களுக்கூடாக மட்டுமன்றி சமயப்பிரசங்கம், கண்டனமரபு என்பவற்றின் மூலமாகவும் சைவசிந்தாந்தக் கருத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கின்றார்கள். அத்துடன் அச்சு வடிவங்களுக்கூடாக மட்டுமன்றி சமயப்பிரசங்கம், கண்டன மரபு என்பவற்றின் மூலமாகவும், தனது வாழ்வியலினூடாகவும் சைவசித்தாந்தத்தினை ஒரு மக்கள் தத்துவமாக முன்கொண்டு சென்றிருக்கின்றார்கள். மக்களது வாழ்வியலுக்கும் சைவசித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை ஆய்வுகளின்வழி நிறுவியுள்ளார். அத்துடன் மக்களது வழிபாட்டிலும், சடங்குகள், சமயக்கிரியைகள் போன்றவற்றிலும் சைவசித்தாந்தம் இழையோடியுள்ளதை தனது ஆழ்ந்த புலமைச்செயற்பாடுகளினூடாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கமைய விபரண ஆய்வு முறையில் இவரது பணிகள் மதிப்பிடப்படுகின்றன. மேலும் சமகாலச் சைவசித்தாந்தப் பேரறிஞர்களில் பண்டிதர் மு. கந்தையா அவர்களின் வகிபங்கு எத்தகையது என்பதை ஒப்பீட்டு நோக்கிலும் இக்கட்டுரை ஆராய்கிறது. |
en_US |