dc.description.abstract |
சிவாகம மரபின் தத்துவச் சிறப்பியல் சிவாகமங்களின் ஞானபாதம் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவை சிறப்பாக சைவசித்தாந்தத் தத்துவச் செறிவினை வெளிப்படுத்துவன. சிவாகமங்களின்
ஞானபாத முதனூல்களுள் சிறப்பாக சைவசித்தாந் தத்துவசாரத்தைக் கூறும் நூல்களின்
வரிசையில் பௌஷ்கராகமம் முக்கியத்துவமுடையது. பௌஷ்கராகமம் பாரமேஸ்வரம் எனும்
மூலாகமத்தின் உபாகமங்களும் ஒன்றாகும். இப்பௌஷ்கராகமம் ஞானபாத்த்தினை மாத்திரமே
உள்ளடங்கலாகக் கொண்டது. தமிழில் சைவ சித்தாந்த அஷ்டகத்தை எழுதிய சிதம்பரம் உமாபதி
சிவாச்சாரியார் இப் பௌஷ்கராகமத்திற்கு சமஸ்கிருதத்தில் பாஷ்யம் எழுதியுள்ளார். சம்ஸ்கிருத
சைவசித்தாந்த மரபில் சிறப்பாக உரைவிளக்கத்திற்கு அஷ்டபிரகரணங்களிலும் அவற்றின்
உரைகளிலும் முக்கியத்துவம் பெறுவதோடு சிவாகமத்தின் சைவசித்தாந்த சார்பு நூல்களிலும்
இப்பௌஷ்கராகமம் முக்கியத்துவம் பெறுகின்றது. கி.பி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த உமாபதி
சிவாச்சாரியார் இதற்கு சம்ஸ்கிருத பாஷ்யம் எழுதியுள்ளார். சிவாகம பரிபாஷைகளுக்கு மேலாக
சைவசித்தாந்த பரிபாஷைகளுடன் செறிந்த காரமுடைய பொருட்செறிவை உமாபதி
சிவாச்சாரியாரின் சம்ஸ்கிருத பாஷ்யம் இப் பௌஷ்கராகமத்தை விளக்கிக்கொள்வதற்கு
எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை வெளிக்கொணருவதே இந்த ஆய்வின்
நோக்கமாகும். இந்த ஆய்வின் பயனாக பௌஷ்கராகமத்திற்குரிய தனித்துவம் மிக்க
கலைச்சொற்களிற்கான விளக்கங்களை எத்தகைய பின்னணியில் விளக்கம் கொள்ள வேண்டும்
என்பதனை உமாபதி சிவாச்சாரியார் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய பாஷ்யம் சுட்டி நிற்கின்றது
என்பது வெளிக்கொணரப்படும். இந்த ஆய்விற்கான முதல் மூலமாக உமாபதி சிவாச்சாரியார்
சம்ஸ்கிருத மொழியில் எழுதிய பௌஷ்கராகம பாஷ்யம் எனும் அம்பலவாண நாவலரது
பதிப்பினையும், ஏனைய நூல்களைத் துணை மூலங்களாகவும் கொண்டு இந்த ஆய்வு
முன்னெடுக்கப்படுகின்றது. இலக்கிய விவரண ஆய்வு முறையியல், வரலாற்று முறையியல்,
ஒப்பியல் ஆய்வு முறையியல் என்பன ஆய்வு முறையியல்களாக பயன்படுத்தப்படும். இந்த
ஆய்வின் பெறுபேறாக சிவாகமங்களின் ஞானபாதத்தில் சிறப்பாக பௌஷ்கராகமம்
ஞானபாதத்தில், சமஸ்கிருதத்தில் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய பாஷ்யத்தின் திறன்,
சைவத்தமிழ் மரபிற்று அதன் உள்ளடக்கத்தினை அடையாளப்படுத்திக் கூறும் தன்மையில்
சைவசித்தாந்த தத்துவ்வியலாளர்களுக்கு பயன் பெறும் தன்மையுடையதாக விளங்கும் |
en_US |