dc.description.abstract |
ஆலய வழிபாட்டில் இசைவளங்களின் செல்நெறி எனும் தலைப்பிலமைந்த இந்த ஆய்வானது
ஆலயத்தின் வழிபாட்டு முறைகளில் காணப்படும் இசை அம்சங்களை மூன்று விதமான
தடங்களில் ஆராய்வதாக அமைகிறது. அவையாவன பூசை மற்றும் திருவிழாக்களில் பாடப்படும்
தேவாரப்பாடல்கள், வாத்திய இசை, மங்கல வாத்தியங்கள் என்பனவாகும். இத்தகைய
இசைக்கூறுகள் ஆலய வழிபாட்டு முறைகளில் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு
வந்திருக்கின்றன. ஆலயங்கள் உருவாக்கப்பட்டு கிரியை முறைகள் வகுக்கப்பட்ட போதே
அவற்றில் பங்கு பெறுகின்ற இசை அம்சங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் ஆலய
பூசை நேரங்களில் பாடப்படும் தேவாரங்கள், ஆழ்வார் பாசுரங்கள், இசைக்கருவிகள் மற்றும்
விஷேட விழாக்கள், விரத காலங்களில் பாடப்படும் பாடல் வகைகளும், பயன்படுத்தப்படும்
இசைக்கருவிகளும், அவை தவிர மங்கல வாத்தியங்களும் பண்டைக்கால ஆலய வழிபாட்டு
முறைகளோடு ஒட்டிக் காணப்பட்டன. ஆனால் தற்காலத்தில் நவீனமயமாக்கப்பட்ட அலய
முறைமைகளும், நேர முகாமைகள், பழமை பேண முடியாத ஆலய நிர்வாகங்கள், இறையியல்,
இசையியல் மீதான மக்களின் நாட்டக்குறைவு, சினிம நாடகங்கள் மீதான அதீத மோகம்,
திட்டமிட்ட கலாசார மற்றும் மத அழிப்பு, மதமாற்றம் என்பவை தற்காலத்தில், வழிபாடுகளில்
இடம்பெறும் இசைக்கூறுகளின் ஆதிக்கத்தை படிப்படியாக அழிவடைந்து செல்ல வைக்கின்றன.
இத்தகு நிலையிலிருந்து ஆலய வழிபாட்டில் இழக்கப்பட்டு கொண்டிருக்கும் இசை வளங்களை
மீட்டெடுக்கும் வழிவகைகளை தேடுவதாக இந்த ஆய்வு அமைகிறது. |
en_US |