dc.description.abstract |
இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபட்ட சமயங்களில் இந்துசமயம் முதன்மையானது. இத்தகைய சமயத்தின் இலக்கியங்கள் பலவும் இயற்கையை இறைவனுடன் இணைத்துப் போற்றும் பாங்கில் அமைந்துள்ளன. இந்து இலக்கியங்களுக்கெல்லாம் மூலம் வேதங்கள் ஆகும். வேதத்தின் பகுதிகளாவன சங்கிதைகள், பிரமாணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என்பவையாகும். வேதங்களின் அந்தமாகத் தோன்றிய உபநிடதங்களில் இயற்கை அம்சங்களுடன் இயைந்த வகையிலும், இயற்கையை உவமானமாக்கியும் த்த்துவார்த்தங்கள் பேசப்படுகின்றமையைக் கண்டுகொள்ள முடிகின்றது. அவ்வாறாகப் பௌதிகவியலுடன் இணைந்த தத்துவார்த்தங்களை நோக்காகக் கொண்டே இவ்வாய்வு முன்மொழியப்படுகிறது. உபநிடதங்களில் இயற்கையின் அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், அவற்றைப் பேண வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரம்மம், ஆன்மா, உலகம் ஆகிய தத்துவப்பொருட்களை விளக்கப் பௌதிகவியல் அம்சங்கள் எடுத்தாளப்படுவதுடன், அவற்றின் வெயற்பாடுகளை உவமித்துத் தத்துவங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடற்பாலது. இன்றைய காலச்சூழலில் இயற்கையின் அருங்கொடைப் பெறுமானங்களை உணராது அவற்றை நிலைகுலையச் செய்கின்ற மனிதகுலத்தின் செயற்பாடுகளை விமர்சனரீதியில் நோக்குதல் மற்றும் இந்துதர்மம் இயற்கையில் இறைவனைக் கண்டு அனுஸ்டானங்களின் வாயிலாக அவற்றின் பாதுகாத்த தன்மையை நினைவுபடுத்தி இயற்கையைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துதல் என்பவை இவ்வாய்வின அடிப்படை நோக்கங்களாக அமைகின்றன. இவ்வாய்விற்கான முதன்மை மூலங்களாகத் தேரந்தெடுக்கப்பட்ட சில முக்கிய உபநிடதங்களும், துணைமூலங்களாக வேத இலக்கியங்கள் மற்றும் இவை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான இலக்கிய மூலங்களை விபரன ஆய்விற்குட்படுத்தி இவ்வாய்விற்கான பெரும்பாலான தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், வேத சங்கிதைகள் முதலான ஏனைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பௌதிக தத்துவத்துடன் ஒப்பிட்டு நோக்க ஒப்பியல் ஆய்வு முறையும் பயன்படுத்தப்பட்டது. எனவே உபநிடதங்களில் விளக்கப்பட்டுள்ள பௌதிக தத்துவங்களை ஆழமாகச் சிந்தித்து, இறைவனுக்கு நிகராக இயற்கையை மதித்துப் போற்றுதலுடன், அதனைப் பேணிக்காக்கவும் முனைதல் வேண்டும். அத்தோடு இயற்கையின் அமசங்களையும் பஞ்சபூதங்களையும் மற்றும் அவற்றின் பல்வேறுபட்ட உயிரினப் பரிணாமங்களையும் இறைவனின் வடிவங்களாகக் கொண்டு, சமய ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இயற்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாக்க முனைதல் மட்டுமே உலக இருப்பிற்கும் மனித வாழ்வின் சிறப்பிற்கும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. |
en_US |