dc.description.abstract |
இலங்கையில் இந்துப் பண்பாடு நிலைபெற்றுள்ள பிரதேசங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் ஒன்றாகும். காலனித்துவ ஆடசியின் பின் மட்டக்களப்புச் சைவக் கோயில்களும் அவை மீது எழுந்த பிரபந்தங்களும் எனும் தலைப்பில் அமைந்துள்ள இவ்வாய்வானது பின்காலனித்துவ காலத்தில் மட்டக்களப்பில் ஏற்பட்ட இந்துப் பண்பாட்டு மாற்றங்கள், இந்துக் கோயில்கள், கோயில்களின் மீது பாடப்பட்ட பிரபந்தங்கள், அவை வெளிப்படுத்தும் இந்துப் பண்பாட்டம்சங்கள் என்பவற்றினை வெளிக்கொணர்வதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் வரலாற்றியல் ஆய்வுமுறை, பகுப்பாய்வு முறை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மட்டக்களப்பு பிரதேசத்தில் புராதனமான இந்துப்பண்பாடு நிலவியிருப்பதும், இந்தியாவிலிருந்து வெவ்வேறு காலப்பகுதிகளில் குடியேற்றங்கள் இடம்பெற்றிருப்பதும், ஐரோப்பியராட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டமையும் இந்த ஆய்வினூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. கோயில்களின் சிறப்பினையும் அதுசார்ந்த பண்பாட்டு அம்சங்களினையும் வெளிக்கொணர்வதில் அக்கோயில்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்கள் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இப்பிரபந்தங்களினூடாக வெளிப்படும் பண்பாட்டம்சங்களினை சமயம் மற்றும் தத்துவசிந்தனைகள், வாழ்வியல் சார்ந்த பண்பாட்டு அம்சங்கள் எனும் அடிப்படையில் இந்த ஆய்வானது வெளிப்படுத்தப்படுகிறது. |
en_US |