dc.description.abstract |
இந்திய மெய்யியற் புலத்தில் தனக்கென தனியிடத்தைக் கொண்டதாக அமைவது சைவசித்தாந்தம் எனலாம். இது முப்பொருளை ஏற்று நின்று பன்மைவாதமாகத் திகழ்கின்றது. இந்நிலையில் சைவசித்தாந்தப் பௌதிக அதீத உண்மைகளாக பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களும் கொள்ளப்படும் நிலையில் இக்கருத்துக்களை நிறுவ பிரமாணங்கள் உதவுகின்றது. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியில் பற்றிய கருத்தாடலில் அறிவின் தன்மையும் வெளிப்பாடும் முக்கியமாக அமைகின்றது. அறிவானது உண்மையினை உணர்த்துகின்ற நிலையில் அது சுய வெளிப்பாடுடையது என்பதை உணர்த்துவதாகவே அமைகின்றது. ஏனைய மெய்யியல்களைப் போல சைவசித்தாந்தம் வலிதான அறிவு, வலிதற்ற அறிவு என அறிவை வகைப்படுத்தாமல் அறிவின் சுயமான வலிதாம் தன்மையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளமையை ஆய்வு செய்வதாகவே இவ்வாய்வு அமைகின்றது. சைவசித்தாந்தப்படி அறிவு சுயவலிமை உடையது எனவும் ஆன்மா தனது சுயப்பிரகாசமான அறிவைப் பெறுகின்றது. அதற்குப் புறக்காரணியாக மல பந்த்த்தினால் மட்டுமே அறிவைப் பெறமுடியாதிருக்கின்றது. இந்நிலையில் ஆன்ம சிற்சக்தி என்பது சுயமாக இயங்க வல்லது என சைவசித்தாந்தம் குறிப்பிடும் நிலையில் ஆன்மாக்கு அறிவு சுயப்பிரகாசமானது என்றும் கருத்து நிலையினை எடுத்தியம்பி அனைத்தையும் அறியும் ஆற்றலை ஆன்மாவுக்குக் கொடுப்பது அறிவு என்பதை இவ்வாய்வு வெளிப்படத்தி நிற்கின்றது. |
en_US |