dc.description.abstract |
இந்துப் பண்பாட்டு வரலாற்றில் பல்வேறு சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்து அறிவியல், இந்து அறவியல் என்பன குறிப்பிடத்தக்கன.இந்து அறிவியல் சிந்தனைகள் இந்துப் பண்பாட்டின் ஆரம்ப நிலையிலிருந்தே முளைவிடத் தொடங்கி இன்று பல கிளைகளாகப் பிரிந்து விரிந்து விருட்சமாகி நிற்கின்றது. அக்கிளைகளில் இந்துக்களின் மருத்துவப் பாரம்பரியத்திற்கும் தனித்த இடமுண்டு. ஆநாயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாதவைகளாகும். ஒவ்வொரு மனித சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு ?முறையைக் கொண்டுள்ளது. இந்துக்களைப் பொறுத்தவரையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என இரு பெரும் அறிவுப்புலங்களாக வளர்ச்சியுற்றது. மிகப் பழமையான மருத்துவ முறை என ஆயுர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவர். தென்னிந்திய மரபோடு குறிப்பாக தமிழகத்தின் பதினெண் சித்தர் மரபோடு தொடர்புற்று வளர்ந்த மருத்துவப் புலமாக சித்த மருத்துவம் விளங்குகின்றது. சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாகும். தொன்மையுள் தொன்மையான இந்தியப் பெருநாட்டில் அண்மைக்காலம் வரை வெகுவாக வழங்கி வந்த இம்மருத்துவ முறை, இந்துக்களுக்கேயுரிய தனிச்சிறப்பு வாய்ந்த்து. பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளனர். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள்ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக்க் கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள் அல்ல. மறுக்க முடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவை அல்ல. நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்க கூடியவை. இந்நிலையில் கருப்பம் எப்படி உண்டாகிறது என்பதை முதலில் அறிந்தவர்கள் தமிழ்ச் சித்தர்களே ஆவார்கள். குழந்தை கடவுள் அருளால் உண்டாகிறது என்று மேல்நாட்டவர்கள் நம்பி இருந்த காலத்தில் தமிழ் மருத்துவர் கருப்பக்கோளை ஆய்ந்து தெளிந்து இலக்கியங்கள் கண்டார்கள். இந்த இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தெள்ளத் தெளிந்த கருத்துக்களில் ஒன்றுகூட மாறாமல் இன்று வரை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நவீன மருத்துவ வளர்ச்சிக்கெல்லாம் முன்னோடி தமிழ்ச்சித்தர்கள் கண்ட இலக்கியங்களே. இந்து மருத்துவப் பாரம்பரியத்தில் கருவளர்ச்சி குறித்து அகத்தியர், திருமூலர், யூகிமுனி மற்றும் பல சித்தர்கள் ஆராய்ந்து தெளிவுறுத்தியுள்ளனர். இவ்வாராய்ச்சி குறித்த எண்ணவோட்டங்களை சித்தர்களின் பாடல்களில் இழையோடியிருப்பதை இவ்வாய்வுப்புலம் இனங்கண்டிருக்கிறது. நவீன மருத்தவ முறைகளுக்கெல்லாம் முன்னோடியான கருவளர்ச்சி குறித்த சிந்தனைகளை சித்தர்கள் தமது ஞானஅறிவால் வெயிப்படுத்திய குறிப்புகள் இன்றைய நிலையிலும் நிதர்சனமாக அமைந்துள்ளமையை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது விபரண ஆய்வு முறையியலுக்கமைய செப்பனிடப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்கப் பகுத்தறிவு ஆய்வு முறையியலுக்கும் தொகுத்தறி ஆய்வு முறையியலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |