dc.contributor.author | Mathurajini, S. | |
dc.date.accessioned | 2023-04-21T06:14:48Z | |
dc.date.available | 2023-04-21T06:14:48Z | |
dc.date.issued | 2022 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9339 | |
dc.description.abstract | நாகம் இந்து சமய மரபின் தொன்மம் சார் வழிபாட்டு அடையாளமாக்க் காணப்படுகிறது. ஆதிகாலத்தில் இயற்கை வழிபாடானது அச்சம் மற்றும் பக்தி உணர்வு காரணமாகத் தோற்றம் பெற்றாலும் பிற்காலத்தில் இயற்கை மீது கொண்ட நம்பிக்கையே வழிபாடுகள் தோன்றுவதற்குக் காரணமாயின. அவ்வகையில் நாக வழிபாடானது விலங்கு வழிபாட்டின் தோற்றமாகக் காணப்படுகிறது. ஆதி மனிதன் நாக பாம்பில் மகோன்னதமான தெய்வசக்தி பொருந்தியுள்ளது என்பதை உணர்ந்து அதனை வழிபடத்தொடங்கினான். நாகமானது எவ்வாறு நிலத்தில் ஊர்வதால் மண், வளம் பெறுகிறதோ அவ்வாறே நாகத்தை மனிதன் வணங்குவதனால் அவன் வாழ்வும் வளம் பெறுகின்றது. ஒரு மனிதனுக்கு வாழ்வின் முக்கிய அம்சம் திருமணமும், குழந்தை பேறும் ஆகும். இந்த இரண்டினதும் முக்கிய தெய்வமாக நாக தேவதை காணப்படுகிறாள். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் நாகத்தினை வழிபட்டால் அவர்களக்கு கழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையே நாக வழிபாட்டை உலகெங்கும் பரவச்செய்தது. பொதுவாக நாகதோசம் இருப்பவர்க்கே திருமணத்தடைகள் காணப்படும். அவர்கள் பல காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாமலும் காணப்படுவார்கள். அத்தகையோர் நாகத்தினை வழிபடுவதன் மூலம் அத்தோசங்கள் நீங்கப்பெற்று நல்வாழ்வு பெறுவர். சித்தர்கள் கூட தமது கூடு விட்டு கூடு பாயும் நாகம் மற்றும் காக்கைகளில் தான் பிரயோகிக்கலாம் என கூறியுள்ளனர். அந்தளவிற்கு நாகமானது சக்தி வாய்ந்த்தொன்றாக்க் காணப்படுகின்றது. அத்தகைய நாக வழிபாட்டின் தொன்மையினையும் சிறப்பினையும் ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இவ்வகையில் நாகவழிபாடானது ஆதிகாலம் தொட்டு நிலவி வருகின்றது. இவ் நாக வழிபாட்டின் தொன்மம்யாது? இந்து மரபில் அது சிறந்தோங்குவதற்கான சிறப்பியல்புகளை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வானது நாக வழிபாட்டின் தொன்மம் பற்றி அறிகையில் வரலாற்று ரீதியான ஆய்வாகவும் அடிப்படையில் விபரண ஆய்வாகவும் ஆய்வின் தேவை கருதி பகுப்பாய்வாகவும் உள்ளது. இவ்வகையில் இவ் நாக வழிபாடு தென்னாசியாவின் பழங்குடி மக்களின் வாழ்வோடு இணைந்த வழிபாடாக தோற்றம்பெற்று அன்றுதொட்டு தென்னாசிய நாகரிகத்தில் செல்வாக்கு செலுத்திவரும் ஒரு வழிபாடாக இருந்து வருவதைக் கண்டுகொள்ள முடிகிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | தொன்மம் | en_US |
dc.subject | நாகவழிபாடு | en_US |
dc.subject | நாகதோசம் | en_US |
dc.subject | வம்சவிருத்தி | en_US |
dc.subject | இந்துசமயம் | en_US |
dc.title | இந்து சமயத்தில் நாகத்தொன்மம் | en_US |
dc.type | Article | en_US |