DSpace Repository

இந்துப் பண்பாட்டு மரபில் அபரக்கிரியை மரபுகளும் மாற்றங்களும் அகோர சிவாச்சாரியார் பத்தத்தியை அடிப்படையாகக் கொண்டது

Show simple item record

dc.contributor.author Krishnamoorthy Iyer, T.
dc.date.accessioned 2023-04-21T06:05:02Z
dc.date.available 2023-04-21T06:05:02Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9337
dc.description.abstract சிவாகமங்களின்வழி தனநூல்களாக விளங்குவனவே பத்ததிகள் ஆகும். இவை சிவாகமங்களின் வழி கிரியைகளைச் செய்வதற்கு விளக்கமாகவும் விரிவாகவும் வழிகாட்டுவனவாகும். பதினெண் சிவாச்சாரியார்களால் பத்ததிகள் உருவாகினாலும் அவற்றுள் சோமசம்பு பத்ததி, அகோர சிவாச்சாரியார் பத்ததி இரண்டுமே பிரசித்தமானவை. சைவத் தமிழர்களால் பல நூற்றான்டுகளாக ஆகம மரபு தவறாது எளிமையாகப் புரிந்து கிரியைகளை மனப்பதிவுடன் கிரியை செய்வதற்கு வழிகாட்டியாக உருவாக்கப்பட்டதே அகோரசிவாச்சாரியர் பத்ததி ஆகும். காலப்போக்கினையொட்டி ஆகமம் கூறும் முறைப்படியான கிரியைகளைத் தேச வழமைக்கேற்ப மாற்றியமைக்க இடம் தராது. அகோரசிவாச்சாரியார் பத்ததி வழி சிவாகம முறைப்படி அபரக்கிரியையில் முக்கியமனதாக அந்தியேட்டியானது தீட்சைக்கேற்ப சமய, விசட, நிர்வாண அந்தியேட்டி என மூவகைப்படுகிறது. சமய தீட்சை பெற்றவரே சைவசமயி ஆவார் என்றவாறு சமயதீட்சை பெற்றவர்க்கே சமய அந்தியேட்டி இடம்பெறுதலாகும். துன்மரணமடைந்தவர்க்கு பிரேத உடலுடன் கிரியைகள் எதுவுமின்றி மௌனமாய் தகனம் செய்தலாகும். இவர்கட்கே ஆறாம் மாத நிறைவில் இறப்புத்திதியுடன் தர்ப்பையால் உருவாக்கிய ”புத்தளிகை” எனும் பிரேத சரீரத்துடன் கடற்கரை மண்டபத்தில் அந்தியேட்டிக்கிரியை இடம்பெறும். துர்மரணமடைந்தவர்க்கான இம்முறையே சமயதீட்சை பெறாதவர்க்கும், பெற்றவர்க்கும் வேற்று நாளாகிய துடக்குக் கழியும் முப்பத்தியோராம் நாளில் கால மாற்றத்துடன் தேச வழமைக்கேற்ப இடம்பெறுகிறது. ஆகவே சமய தீட்சை பெறாதவர்க்கான அந்தியேட்டி மரபு மாற்றங்களில் பலன் இன்றி பாதிப்பு ஏற்படலாம். பத்ததி வழியான பாஷாணத்தாபன பூசை என்பது எட்டுச்செலவு, கல்லெடுப்பு என மாற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. இறந்தவருடைய ஆன்மாவைக் கல்லிலே பூசித்தல் ஆகும். துடக்குக் கழியும் மறுநாள்முதல் ஒருவருட முடிவு வரையான அபரக்கிரியைகள் பின்வருமாறு அமைகின்றன. அவையாவன, ஆசௌசம் நீங்கும் மறுநாளில் ஏகோதிட்டமும் மாதாமாதம் இடம்பெறும். சோதகும்ப சிரார்த்தமும் ஒரு வருட முடிவில் இடம்பெறும் கபிண்டீகரணமும் ஆகும். இவற்றை மற்றும் கிரியை செய்யும் கர்த்தாவிற்கு அஷம்பாவித தோஷங்கள், இடையூறுகள் ஏற்படின் ஆசௌசம் நீங்கிய மறுநாளில் ஏகோதிட்டத்துடன் இவையாவும் பொருளாதாரத்திற்கேற்ப உலோபமின்றி செய்ய விதியமைகிறது. தற்காலத்தில் விதிமரபு மாற்றமின்றி பொருத்தமான காலமாற்றத்துடன் இவை இடம்பெறுகின்றன. இந்த ஆய்வு வரலாற்று முறையியல், விபரண முறையியல் ஆகியவற்றினை உள்ளடக்கியனவாக அமைந்துள்ளது. இந்த ஆய்வின் பயனாக விதிநூல்கள் கூறும் மரபிலிருந்து சமூக வழக்காறுகள் எத்தகை மாற்றங்களைப் பெற்றள்ளன என்பதை தெளிவுபடுத்துகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இந்துப்பண்பாடு en_US
dc.subject அகோரசிவாச்சாரியார் en_US
dc.subject அபரக்கிரியை en_US
dc.subject மரபு en_US
dc.subject பத்ததிகள் en_US
dc.title இந்துப் பண்பாட்டு மரபில் அபரக்கிரியை மரபுகளும் மாற்றங்களும் அகோர சிவாச்சாரியார் பத்தத்தியை அடிப்படையாகக் கொண்டது en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record