Abstract:
நாட்டார் வழக்காற்றியல் இன்று நாப்புரட்டுக்கள், வரவேற்புரைகள், விடைபெறும் அனைத்துலகக் கல்விப்புலமாக (Interna-வாய்பாடுகள், நாட்டார் ஆடைகள், நாட்டார் tional Discipline) வளர்ந்து வருகின்றது. நடனம், நாட்டார் நாடகம், நாட்டார் கலை, அதனுடைய தாக்கங்கள், செல்வாக்குகள் ஈழத்திலும் உணரப்பட்டுள்ளன. நாட்டார் வழக்காற்றியல் குறித்த இவ்வாய்வானது. நாட்டார் வழக்காற்றியல் என்ற ஆய்வறிவுத்துறை ஈழத்தில் அறிமுகமான காலம் முதல் இன்றைய காலம் வரை அதன்மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகள் பற்றி நோக்குவதாக அமைகின்றது. ஆய்வின் பிரதான திருப்பங்கள் பற்றியும், அத்திருப்பங்களுக்கு காலாய் அமைந்த ஆய்வுகள் பற்றியுமே இவ்வாய்வு கவனம் செலுத்தும். 'நாட்டார் வழக்காற்றியல்' என்ற சொற்றொடர் குறிக்கும் விடயம் பற்றிய தெளிவு இவ்விடத்தில் அவசிய மாகின்றது.