Abstract:
தமிழ் நாட்டில் ஆட்சி செய்த அரசர்களில் பல்லவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணுவின் அரச மரபில் வந்த பல்லவ மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணு கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவன். தனக்கு முற்பட்ட பல்லவ அரசர்கள் இருந்து அரசாண்ட காஞ்சியில் இருந்து இவன் அரசாண்டான். இவனது மூத்த மகனாகிய
மகேந்திரவர்மன் பல சிறப்புப் பெயர்களைபப் பெற்றவன். அவன் இயற்றிய மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நூல் அவனிபாஜன், சத்துருமல்லன், ஸ்ரீமகேந்திரவிக்கிரமவர்மன் மத்தவிலாசன் போன்ற அவனது விருதுப் பெயர்களைச் சுட்டுகின்றது.