Abstract:
யாழ்ப்பாணம் அதன் புவியியல் அமை விடம் காரணமாக தொடர் படையெடுப் புகளாலும், வெளிச் செல்வாக்குகளினாலும், ஆட்சி மாற்றங்களினாலும், அலைக்கழிக் கப்பட்டு வந்துள்ளது. இதனால் அதன் சமூக, கலாசார உருவாக்கங்களில் பல்வேறு வெளிச்செல்வாக்குகளை உள்வாங்கி தன்வயப்படுத்தி தனித்துவமாக வெளிப் படுத்தும் பண்பே (eclecticism) பிரதான இயங்கு சக்தியாக தொழிற்பட்டுள்ளதை நோக்க முடிகின்றது. இருப்பினும் ஓர் குறிப் பிட்ட சூழலில் உருப்பெறுகின்ற கால வடி வங்கள் அதற்கு பின்வருகின்ற படையெடுப் புகளாலும் போர்களினாலும் அழிக்கப்படு கின்ற துரதிருஷ்டம் வரலாறு ஆகிப்போயுள் ளது. இதானால் யாழ்ப்பாணத்தின் உண் மையான கலைத்தேட்டத்தையும் அதன் செல்நெறிகளையும், வரலாற்றையும் குறிப்பாக காண்பியக் கலைகளில் (Visiual arts) மதிப்பிடுதல் மிகவும் சிக்கலானதாகவும் பூரணமற்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது.